வாஷிங்டன்: நான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்கத் தவறினால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து போக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிப்பேன் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு பராக் ஒபாமா ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியின்போதுதான் இவ்வாறு அவர் கூறினார். அவரது இந்தப் பேட்டி அமெரிக்கா முழுவதும் வைரலாகியுள்ளது. இந்தியாவிலும் பலர் இந்தப் பேட்டியை வைரலாக்கி வருகின்றனர்.
சிஎன்என் தொலைக்காட்சியின் கிறிஸ்டியன் அமன்போர்-க்கு பராக் ஒபாமா அளித்துள்ள பேட்டியில் இந்தியா தொடர்பாக கூறியுள்ளதாவது:
அமெரிக்க அதிபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது என்பது சிறப்பானது. அப்படிப்பட்ட சந்திப்பினோது, இந்தியாவில் முஸ்லீம் சிறுபான்மையினரின் நலன் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அது முக்கியமானது.
ஒரு வேளை எனக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவருடன் பேசும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் நான் இதுகுறித்துப் பேசுவேன். பிரதமர் மோடியை எனக்கு நன்றாகத் தெரியும். அவருடன் பேசும்போது, இந்தியாவில் மதச் சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், ஒரு கட்டத்தில், இந்தியா பிரிந்து போகும் அபாயம் இருப்பதை அவரிடம் தெரிவிப்பேன்.
உள்நாட்டுக்குள் மத ரீதியாக மோதல்கள் ஏற்படுவது நல்லதல்ல. சிறுபான்மை முஸ்லீம்கள் மட்டுமல்லாமல், பெரும்பான்மை இந்து இந்தியர்களும் கூட இதனால் பாதிக்கப்படுவார்கள். எனவே இதை நேர்மையாக எதிர்கொள்வது அவசியம் என்று நான் கருதுகிறேன். உலகம் மிகவும் சிக்கலானது. எனவே எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது, பிரதமர் மோடியுடன் இணைந்து காலநிலை மாற்றம் தொடர்பாக நெருங்கிப் பணியாற்றினேன். பாரீஸ் ஒப்பந்தங்கள் ஏற்பட இரு தலைவர்களும் இணைந்து பணியாற்றினோம்.
சீனா குறித்து அமெரிக்கா அக்கறை காட்ட வேண்டும். உய்குர் முஸ்லீம்களை சீன அரசு முகாம்களுக்கு அனுப்பி வருகிறது. இது அபாயகரமானது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார் பராக் ஒபாமா.
பாஜக கண்டனம்
இதற்கிடையே, பராக் ஒபாமாவின் கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பான்டா கூறுகையில், விஷமத்தனமாக பேசியுள்ளார் பராக் ஒபாமா. இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து குரல் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் பான்டா.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
{{comments.comment}}