ஐபிஎல் பிளே ஆப் மேட்ச் பார்க்கவா போறீங்க.. அப்ப மெட்ரோவில் டிக்கெட் எடுத்தாகணும்!

May 23, 2023,09:11 AM IST
சென்னை:  சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் பிளே ஆப் போட்டிகளைக் காண மெட்ரோ ரயில் சேவையப் பயன்படுத்துவோர், போட்டி டிக்கெட்டை காட்டி பயணிக்க முடியாது என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் கடைசிக் கட்டத்துக்கு வந்து விட்டன. சுற்றுப் போட்டிகள் எல்லாம் முடிந்த நிலையில் தற்போது பிளே ஆப் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.



இதில் இன்றும் நாளையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  முதல் குவாலிபயர் போட்டியும், எலிமினேட்டர் போட்டியும் நடைபெறவுள்ளது. முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இப்போட்டி இன்று நடைபெறுகிறது.

இதுவரை நடந்த லீக் போட்டிகளுக்காக மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்திய ரசிகர்கள்,போட்டியைப் பார்க்க எடுத்த டிக்கெட்டுகளைக் காட்டி மெட்ரோவில் இலவசமாக  பயணித்து வந்தனர். ஆனால் பிளே ஆப் போட்டிகளுக்கு இந்த இலவச முறை செல்லாது என்று மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சுற்றுப் போட்டிகளுடன் அந்த சலுகை முடிந்து விட்டதாகவும், பிளே ஆப் போட்டிகளைப் பார்க்க வருவோர், டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும் என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் (91-8300086000) மூலமாகவும் , க்யூ ஆர் கோடு மூலமாகவும் டிக்கெட்களைப் பெறலாம் என்றும் இதனால் கூட்ட நெரிசலில் நிற்பதைத் தவிர்க்க முடியும் என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இரவு 11 மணிக்கு மேல் டிக்கெட் கவுன்டர்கள் செயல்படாது என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்��ுள்ளது.


அதேசமயம், போட்டிகள் நடைபெறும் இரு தினங்களிலும் இரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்