ஐபிஎல் 2023 அதிரடி.. பெங்களூரு அணி தோல்வியால் பிளேஆஃப்க்கு முன்னேறிய மும்பை

May 22, 2023,11:28 AM IST
டெல்லி : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி நேற்று தோல்வி அடைந்ததை அடுத்து, பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

ஐபிஎல் 2023 ல் தற்போது லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்து பிளேஆப் சுற்றுக்கான தகுதி போட்டிகள் நடந்து வருகிறது. பிளேஆஃப் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெறும். இதற்காக 6 போட்டிகள் நடத்தப்பட்டன. 

ஐபிஎல் பிளேஆஃப் ரேஸில் இருந்து ஐதராபாத், பஞ்சாப், டில்லி அணிகள் அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நிலையில் முதல் ஆளாக குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. மற்ற 3 இடங்களை பிடிக்க கடும் போட்டி நடந்து வந்தது. குஜராத்தை தொடர்ந்து சென்னை மற்றும் லக்னோ அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தன. 

நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்குள் நுழையும் என சொல்லப்பட்டது. ஆனால் மழை குறுக்கிட்டதால்ஆட்டத்தின் போக்கு மாறியது. விராத் கோலி சதம் அடித்து அணியில் ஸ்கோரை உயர்த்திய போதும் குஜராத் அண���யிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, பெங்களுரு அணி பிளே ஆஃப்பிற்கு போக முடியாமல் வெளியேறியது.

பெங்களுரு அணி பிளே ஆஃப் சுற்றிற்கு செல்ல முடியாமல் போனதால், புள்ளிகளில் சமமாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதனால் பிளே ஆஃப் சுற்றிற்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. 

இதுவரை நடந்த 14 போட்டிகளில் தர வரிசை பட்டியலில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று, 20 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது. 8 வெற்றிகள், 17 புள்ளிகளுடன் சென்னை மற்றும் லக்னோ அணிகள் முறையே 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன. 8 வெற்றிகள், 16 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி 4வது இடத்தில் உள்ளது.

பிளேஆஃப் போட்டிகள்

குவாலிபயர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நாளை சென்னையில் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். தோல்வியடையும் அணி குவாலியபர் 2க்கு தகுதி பெறும். 

24ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெறும். அதில் லக்னோ அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும்.  இதில் வெல்லும் அணி குவாலிபயர் 2க்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி வீட்டுக்குச் செல்லும். குவாலிபயர் 2 போட்டி 26ம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டி மே 28ம்  தேதி நடைபெறும்.

இந்த நான்கு அணிகளில் கோப்பை யாருக்குப் போகப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்