புதுடில்லி : காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக குஜராத் அணி வீரர் வில்லியம்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான கேன் வில்லியன்சன் தற்போது ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் ஆமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக குஜராத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது, 13 வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை கேட்ச் செய்வதற்காக முயற்சித்த போது கீழே விழுந்த போது வில்லியம்சனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. சிறிது நேர ஓய்வு மற்றும் சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் விளையாட வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் சாய் சுதர்சனை குஜராத் அணி களமிறக்கியது. இது குஜராத் அணி வீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
அதே சமயம் இந்த தொடரில் இருந்து வில்லியம்சன் விலகுவது தங்களுக்கு மிகப் பெரிய இழப்பாக கருதுவதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், மிக விரைவில் அவர் மீண்டும் காயத்தில் இருந்து மீண்டு, கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புவார் என நம்புவதாகவும் குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் விக்ரம் சோலன்கி தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்விற்காக வில்லியம்சன் அடுத்த ஒரு வாரத்தில் நியூசிலாந்து புறப்பட உள்ளார். அங்கு தனது வீட்டில் அவர் சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
{{comments.comment}}