மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை இன்று (ஜூன் 27) மும்பையில் வெளியானது. இதில் அக்டோபர் 15ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
13வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இரு இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. ஜூலை 9ம் தேதி இவை முடிவடையும்.
2023 உலக கோப்பை தொடரில் இடம்பெறும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும், 45 லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் நவம்பர் 19ல் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும். இந்த நிலையில், உலக கோப்பைக்கான தற்காலிக அட்டவணை முடிவு செய்யப்பட்டு, மற்ற அணிகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. உலக கோப்பைக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் இன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டது.
முதல் போட்டி அக்டோபர் 5
அதில், அக்டோபர் 5ல் நடக்கவுள்ள துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அக்டோபர் 8ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. முதலாவது அரையிறுதி (நவ.,15) மும்பையிலும், இரண்டாவது அரையிறுதி (நவ.,16) கோல்கட்டாவிலும் நடைபெறுகிறது. நவ.,19ல் நடக்கும் பைனல், ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா – பாகிஸ்தான்
இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுகள் இடையே நிலவும் பனிப்போர் காரணமாக, இந்தியாவில் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வந்தது. உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பங்கேற்காமல் புறக்கணித்தால் தங்களுக்கே இழப்பு என்பதை உணர்ந்த பாகிஸ்தான், இந்தியாவில் விளையாட சம்மதித்தாலும், தங்களுக்கான போட்டிகளை சென்னை, பெங்களூரு போன்ற தென் இந்திய மைதானங்களில் நடத்த வேண்டும் என கோரிக்கையும் விடுத்தது.
ஆனால், சமீபத்தில் வெளியான உத்தேச அட்டவணையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்தாலும், தற்போது வெளியான அதிகாரப்பூர்வ அட்டவணையில் அதே மைதானத்தில் அக்.,15ம் தேதி இரு அணிகளும் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா அல்லது விளையாடுமா என்பது விரைவில் தெரியவரும்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}