டெல்லி: வட மாநிலங்களில் தொடர்ந்து பெரும் மழை பெய்து வருவதால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலம்தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து வருகிறது. 20 பேர் வரை இதுவரை உயிரிழ்ந்துள்ளனர்.
அதிகபட்சமாக ஹிமாச்சல் பிரதேசம்தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தொடர் பெரு மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. திடீர் வெள்ளத்தால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல ஓடுகிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன, மண்ணில் புதைந்துள்ளன. கடைகள், வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
சம்பா, கின்னார், மனாலி, குல்லு ஆகிய பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ரவி, பியாஸ், சட்லஜ், செனாப், ஸ்வான் ஆகிய ஆறுகளில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ள நீர் ஓடுகிறது.
ஹிமாச்சல் பிரதேசம் மட்டுமல்லாமல் அருகாமை மாநிலமான உத்தரகாண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
டெல்லியில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவு பல்வேறு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. யமுனா ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆற்றில் தற்போது 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மேற்கு இந்தியாவில் மழை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}