ஆஹா.. இதுவல்லவோ லட்சியம்.. ஹார்திக் பாண்டியாவோட நியூ இயர் தீர்மானம் என்ன தெரியுமா?

Jan 03, 2023,08:51 AM IST
மும்பை: இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணிக்கு ஹார்திக் பாண்டியா தலைமை ஏற்றுள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி, இலங்கைக்கு எதிரான மூன்று டுவென்டி 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில், இலங்கை உடனான போட்டி பற்றி பாண்டியா பேட்டி ஒன்று அளித்துள்ளார்.


அந்த பேட்டியில், "நியூஇயர் தீர்மானம் என்று பெரிசா ஒன்றும் இல்லை. இந்த வருடத்தில் உலகக் கோப்பையை வெல்லனும் அது தான் நான் எடுத்துள்ள தீர்மானம்.  அதை தவிர பெரிதாக நான் எதையும் நினைக்கவில்லை. உலகக் கோப்பைக்கு முன் எதையும் தவறாக யோசிக்க நான் விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.


ஹார்திக் பாண்டியா தனது அணியினருக்கு கூறி உள்ள ஒரே அட்வைஸ், திறமையை வெளியே கொண்டு வாங்க. நீங்கள் யார் என்பதை வெளிக்காட்டுங்க என்பது மட்டுமே. அதை அணியினர் செய்வார்கள் என தான் நம்புவதாகவும் பாண்டியா தெரிவித்துள்ளார். வீரர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எனக்கு இருப்பதால் மீண்டும் இந்திய அணி பழைய நிலைக்கு திரும்பும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.




இலங்கை உடனான 3 டுவென்டி 20 போட்டிகள் முடிந்த பிறகு, நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளை கொண்ட டுவென்டி 20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க டுவென்டி 20 போட்டிகளில் விளையாடி, வெற்றி பெற்ற அனுபவம் மட்டும் போதாது என்பது பாண்டியாவிற்கு நன்கு தெரியும். இருந்தும் அவர் நம்பிக்கையுடன் களமிறங்கி இருப்பது அனைவரிடமும் அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.  


ஐபிஎல் போட்டிகளுக்கு முன் 6 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளதால் அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும், போதிய நேரம் இல்லை என்றும், செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளதாகவும் இந்திய அணியினர் தெரிவித்துள்ளனர். இனி வரும் போட்டிகளில் புதிது புதிதான வியூகங்கள் மற்றும் திட்டங்களுடன் களமிறங்க உள்ளதாகவும், அது தங்களுக்கு கை கொடுக்கும் என நம்புவதாகவும் பாண்டியா உள்ளிட்டோர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் பாண்டியா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Thala is Back: மீண்டும் கேப்டனானார் தல தோனி.. ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!

news

விடைபெறுகிறார் அண்ணாமலை.. வந்தாச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல்.. நாளை விருப்ப மனு!

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்