டெர்ரர் காட்டிய "சென்னை பையன்".. குஜராத் பையனை வச்சு.. செஞ்சு விட்ட சிஎஸ்கே!

May 30, 2023,09:15 AM IST
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை நையப்புடைத்த சாய் சுதர்ஷனின் ஆட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் ரவீந்திர ஜடேஜா.. சென்னை பையனான சுதர்ஷன் அபாரமாக ஆடி குஜராத் டைட்டன்ஸ் அணியை 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்ற போதிலும், சென்னை அணியின் வெற்றிக்கு அட்டகாசமாக உதவி விட்டார் குஜராத்காரரான ரவீந்திர ஜடேஜா.

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளிலேயே இப்படி ஒரு பரபரப்பையும் அதிரடியையும், பரபரப்பையும், பிபி எகிறியதையும் வேறு எந்த இறுதிப் போட்டிகளிலும் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு வெளுத்து வாங்கி விட்டது ஒவ்வொரு நிகழ்வும்.



முதலில் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் நடைபெறுவதற்குப் பதில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் இதயம் நொறுங்கிப் போகும் அளவுக்கு பிரித்தெடுத்தது. ஷுப்மன் சிங் அவுட்டானதும், அப்பாடா போய்ட்டார்டா தம்பி என்று சற்றே ஆறுதல் பட்ட ரசிகர்கள் நெஞ்சில் கொள்ளியைப் போட்டு விட்டார் சாய் சுதர்ஷன்.

சென்னைக்காரரான இவர் அடித்த அடியை சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்கள் மறக்கவே முடியாது. அந்த அடி, காட்டடி, மாட்டடி.. வந்த பந்தையெல்லாம் பவுண்டரிகளுக்கு இவர் விரட்ட விரட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆடிப் போய் விட்டார்கள்.. அந்த அகமதாபாத் சமஸ்தானே ஆடிப் போச்சுப்பா என்று சொல்லும் அளவுக்கு சாய் சுதர்ஷன் அதிரடி காட்டி விட்டார். கடைசி ஓவர் வரை விடாமல் ஆடிய சுதர்ஷன் 96 ரன்கள் எடுத்துத்தான் ஓய்ந்தார்.

214 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் குவித்த நிலையில் எப்படி இதை சமாளித்து கரையேறப் போகிறதோ சென்னை என்ற கவலை எல்லோருக்கும் வந்தது. சேசிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பித்து 3 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டு விட்டது. செம மழை கொட்டியதால் போட்டி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மழை நின்றபின்னர் ஆடுகளம் சரியாகும் வரை காத்திருந்து நீண்ட தாமதத்திற்குப் பின்னர் 12 மணிக்கு மேல் போட்டி தொடர்ந்தது.

டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள்  ரன் குவிப்பில்குதித்தனர். ருத்துராஜ் 26 ரன்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழக்க டேவன் கான்வே தொடர்ந்து அதிரடியாக ஆடி 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சிவம் துபே வழக்கம் போல விறுவிறுப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 ரன்களை அள்ளினார். ரஹானே 27 ரன்கள் குவிக்க, கேப்டன் டோனி டக் அவுட் ஆகி அதிர வைத்தார். ஐபிஎல்லிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அம்பட்டி ராயுடு 19 ரன்களைச் சேர்த்தார்.

இது எல்லாவற்றையும் விட கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜாவின் ஹீரோயிசம்தான் சென்னை அணியை தூக்கி கொண்டு போய் விட்டது. அதிரடியாக ஆடிய ஜடேஜா 6 பந்துகளில் 15 ரன்களைக் குவித்தார். இதில் கடைசியாக அவர் சாத்திய அட்டகாசமான வெற்றி பவுண்டரி ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைத்து விட்டது. கடைசி ஓவரில் அவர் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி எடுத்து சென்னை அணியை "கிளவுட் 5"க்கு கொண்டு சென்று விட்டார்.

சென்னைப் பையன் சுதர்ஷன் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்களை பெரும் சந்தோஷத்தில் மூழ்கடித்த நிலையில் உள்ளூர் பையனான ரவீந்திர ஜடேஜா அட்டகாசமாக அதை முறியடித்து அந்த உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மடை மாற்றியது வரலாறு காணாத சம்பவமாகும்.

இதுக்குப் பேருதான் அவன் பொருளையே எடுத்து அவனையே செய்வது என்பதோ!

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்