சகல தோஷங்களையும் போக்கும் சனி மஹா பிரதோஷம்!

Mar 04, 2023,09:11 AM IST

சென்னை : சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறை திரியோதசி நாளில் வரும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். 


தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. இது தேவர்களையும், அசுரர்களையும் விரட்டியது. விஷத்திடம் இருந்து தப்பிப்பதற்காக கைலாயத்தை சுற்றி இங்கும், அங்குமாக ஓடி இறுதியாக சிவனிடம் சென்று முறையிட்டனர். உலக உயிர்களை காப்பதற்காக அந்த விஷத்தை குடித்தார் சிவ பெருமான். தேவர்கள் கைலாயத்தை வலம் வந்த முறைக்கு சோமசூக்த முறை என்று பெயர். இந்த முறையிலேயே சிவாலயங்களில் வலம் வர வேண்டும் என்பது நியதி.


மார்ச் 04 - இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


ஆனால் விஷத்தை விழுங்கினால் தனக்குள் இருக்கும் உயிர்கள் இறந்து விடுமே என நஞ்சினை கண்டத்தில் நிறுத்தில், நீலகண்டராக காட்சி அளித்தார் சிவ பெருமான். தங்களை காப்பாற்றிய சிவ பெருமானை தேவர்கள் பூஜை செய்து வழிபட்ட  காலமே பிரதோஷ காலமாகும். இந்த நாளில் விரதமிருந்து நாமும் சிவ பெருமானை வழிபட்டால் சகல விதமான பாவங்களும், தோஷங்கள் விலகி, துன்பம் இல்லாத நல்வாழ்வு கிடைக்கும்.


சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதனாலேயே இதை சனி மஹா பிரதோஷம் என அழைக்கின்றோம். ஆயிரம் சாதாரண பிரதோஷங்களில் கலந்து கொண்ட பலனை, ஒரு சனி பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பெறலாம். பிரதோஷ காலத்தில் நந்தியையும், சிவ பெருமானையும் வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, சிவ நாமம் சொல்லி விட வழிபட கேட்ட வரங்கள் அனைத்தையும் ஈசன் அருள்வான்.


சனிப்பிரதோஷ நாளில் சிவனை வழிபட்டால் இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு பல மடங்கு பலனை தரும். பிரதோஷ விரதம் பிறப்பே இல்லாத முக்தி நிலையை கொண்டுக்கும் என புராணங்கள் சொல்கின்றன.


சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்