கேங்ஸ்டர் தில்லுவை.. 100 முறைக்கு மேல் சரமாரியாக வெட்டிய கும்பல்.. ஷாக் காட்சிகள்!

May 05, 2023,09:16 AM IST
டெல்லி: டெல்லி திஹார் சிறைக்குள் சமீபத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கேங்ஸ்டர் தில்லு தாஜ்பூரியாவை கொலை செய்த கும்பல், கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட முறை வெட்டியும், குத்தியும் வெறியாட்டம் போட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஜிதேந்தர் கோகி என்ற இன்னொரு கேங்ஸ்டர் கும்பலுக்கும், தில்லு தாஜ்பூரியாவுக்கும் ஏற்கனவே பகை உள்ளது. ஜிதேந்தர் கோகியை, கடந்த 2021ம் ஆண்டு டெல்லி ரோஹினி கோர்ட் வளாகத்திற்குள் வைத்து தாஜ் கும்பலைச் சேர்ந்த 2 பேர் வக்கீல்கள் போல உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தில்லு தாஜ்பூரியாவை பழி தீர்க்க காத்துக் கொண்டிருந்தனர் கோகி கும்பலைச் சேர்ந்தவர்கள்.



தில்லு தாஜ்பூரியா திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவரைக் கொல்ல ஸ்கெட்ச் போடப்பட்டது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அவரை கோகி கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக குத்திக் கொன்றனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதைப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. 6 பேர் சேர்ந்து தில்லு தாஜ்பூரியாவைக் கொலை செய்துள்ளனர். கத்தி, இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் அடித்தும், சரமாரியாக குத்தியும் கொலை செய்துள்ளனர். கழுத்து, முதுகு, தோள்பட்டை, தலை என ஒரு இடம் பாக்கியில்லை. தன்னைக் காத்துக் கொள்ள கடுமையாக முயன்றுள்ளார் தில்லு தாஜ்பூரியா. ஆனால் அந்தக் கும்பல் அவரை விடவில்லை. அவரது அறையிலிருந்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக வெறித்தனமாக கொன்றுள்ளனர்.

தில்லு தாஜ்பூரியா உயிருக்கு ஆபத்து இருந்ததால் அவரை தனியாக ஒரு பகுதியில் அடைத்திருந்தனர். அந்தப் பகுதிக்கு இன்னொரு கட்டடம் வழியாக அந்தக் கும்பல் சுவர் ஏறிக் குதித்து புகுந்துள்ளனர். போர்வைகளை ஏணி போல பயன்படுத்தி அதைக் கொண்டு மேலே ஏறியுள்ளனர். 2 பேர் இப்படி ஏறும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.

தில்லு தாஜ்பூரியாவை 100க்கும் மேற்பட்ட முறை கொடூரமாக குத்தியதும் சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது. திஹார் சிறைக்குள் நடந்த மிகப் பெரிய  தாக்குதல் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்