பாரீஸ்: பிரான்சில் தனது மனைவியை கடந்த 10 வருடமாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ படம் எடுத்து ரசித்துள்ளார் ஒரு குரூரமான புருஷன். இந்த விவகாரம் பிரான்ஸை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
மொத்தம் 51 பேர் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் எத்தனை முறை பலாத்காரம் செய்தார்கள் என்பதற்கு கணக்கே கிடையாது. கிட்டத்தட்ட தினசரி இந்த அக்கிரமம் நடந்துள்ளது. மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை மயக்க நிலையில் வைத்து இந்த பலாத்காரக் கொடுமையை இந்த கொடூரன் அரங்கேற்றியுள்ளார். இதை முழுக்க முழுக்க அவர் வீடியோ படமும் எடுத்துள்ளார்.
என்ன கொடூரம் என்றால் இத்தனைக் கொடுமையும் அந்தப் பெண்ணுக்கு சமீபம் வரைக்கும் தெரியவே இல்லையாம். கணவர்தான் தன்னுடன் உறவு கொண்டுள்ளதாகவே இந்தப் பெண் நினைத்து வந்துள்ளார். கடந்த 10 வருடமாக தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துத் தெரிய வந்ததும் அந்தப் பெண் அதிர்ந்து போய்விட்டாராம். இந்த ஜோடிக்கு திருமணமாகி 50 வருடங்களாகிறது என்பது வேதனையான இன்னொரு விஷயம்.
மொத்தம் 92 பேர் இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இதுவரை 51 பலாத்காரக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே கைதாகியுள்ளனர். இவர்கள் 26 முதல் 73 வயது வரை கொண்டவர்கள் ஆவர்.
நகராட்சி கவுன்சிலர், லாரி டிரைவர், தீயணைக்கும் வீரர், ஐடி ஊழியர், வங்கி ஊழியர், சிறைக் காவலர், நர்ஸ், பத்திரிகையாளர் என சகலரும் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர். இந்தப் பெண்ணின் கணவர் பெயர் டொமினிக். தினசரி தனது மனைவிக்கு இரவில் ரோலோஸெபம் என்ற மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து வந்துள்ளார் டொமினிக். அதைச் சாப்பிட்டு அவர் மயங்கிய பிறகு தனது வீட்டுக்கு ஆண்களை வரவழைப்பாராம் இந்த கணவன். அவர்கள் வந்து அப்பெண்ணை நாசம் செய்து விட்டுப் போவார்கள்.
இந்த பாலியல் வக்கிரத்தை வீடியோ எடுத்து அதை தொகுத்து வைத்து வந்���ுள்ளார் அப்பெண்ணின் கணவர். இந்த வீடியோக்களை தொகுத்து "ABUSES" என்ற பெயரில் ஒரு பென் டிரைவில் சேகரித்து வைத்துள்ளார். அதைப் போலீஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர். இதில் பல ஆண்கள் பலமுறை வந்து பாலியல் பலாத்��ாரம் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டொமினிக் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் டொமினிக்கின் செயலையும், தங்களது தாய்க்கு நேர்ந்த கொடுமையையும் அறிந்து அதிர்ந்து போய் விட்டனர். கணவரின் செயலால் பெரும் மன உளைச்சலுக்குள்ளான டொமினிக்கின் மனைவி தற்போது விவாகரத்து செய்து விட்டார். டொமினிக் மீதான விசாரணை தொடர்கிறது.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}