இவருக்கு மட்டும் வயசு ரிவர்ஸ்ல போகுதோ... சேலை கட்டிய மஞ்சு வாரியர்.. ஜில் ஜில் போட்டோக்கள்!

Feb 27, 2023,03:03 PM IST
திருவனந்தபுரம் : அழகான புடவை கட்டிய போட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள நடிகை மஞ்சு வாரியர், அதனுடன் பதிவிட்டுள்ள கேப்ஷன் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. மஞ்சு வாரியரின் அழகையும், அவரின் கேப்ஷனையும் பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.



மலையாளத்தில் டாப் நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தனது 17 வது வயதில் நடிக்க வந்தார். தற்போது 44 வயதாகும் மஞ்சு வாரியர் தயாரிப்பாளர், பின்னணி பாடகி என பன்முகத்தன்மையுடன் அசத்தி வருகிறார். மலையாளத்தை தொடர்ந்து இந்தியிலும் பிரபலமான மஞ்சு, தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் கோலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். இந்த படம் ஏராளமான தேசிய விருதுகளை வாங்கி குவித்தது.

இதற்கு பிறகு சமீபத்தில் ரிலீசான அஜித்தின் துணிவு படத்திலும் நடித்திருந்தார் மஞ்சு வாரியர். நடிப்பில் பின்னி எடுக்கும் படங்கள் மட்டுமல்ல ஆக்ஷன் படங்களிலும் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். 1998 ம் ஆண்டு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்ட மஞ்சு வாரியருக்கு ஒரு மகள் உள்ளார். 2014 ம் ஆண்டு திலீப்புடனான திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்த மஞ்சு வாரியர்,2015 ம் ஆண்டு விவாகரத்தும் பெற்றுள்ளார்.



விவாகரத்திற்கு பிறகு செம ஸ்லிம்மாகி, யூத் லுக்குடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் மஞ்சு வாரியர். இளம் நடிகைகள் பலருக்கும் டஃப் கொடுக்கும் அழகுடன் பல மொழி சினிமாக்களில் கலக்கி வருகிறார். தற்போது 3 படங்களை கையில் வைத்துள்ளார். இதில் இந்தியிலும் ஒரு படம் நடித்து வருகிறார். இதற்கிடையில் சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

லேட்டஸ்டாக சிக்கென புடவை கட்டிய போட்டோக்களை வெளியிட்டு, புடவை பற்றி அழகாக விளக்கம் கொடுத்துள்ளார். அவர் தனது கேப்ஷனில், "புடவை என்பது வெறும் உடையல்ல. அது ஒரு மொழி" என ஹார்ட் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாயை பிளந்து அவரின் அழகை பாராட்டி வருகின்றனர். இவருக்கு மட்டும் நாளுக்கு நாள் வயசு ரிவர்ஸ்ல போகுதா என பலரும் ஆச்சரியப்பட்டு கேட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

news

அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!

news

98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!

news

பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!

news

Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்