Exit Polls: திரிபுரா , நாகாலாந்து தேர்தல்களில் பாஜக வெல்லும்.. எக்ஸிட் போல்

Feb 28, 2023,09:03 AM IST
டெல்லி: திரிபுரா, நாகாலாந்து சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மேகலாயாவில் பாஜகவுக்கு 3வது இடமே கிடைக்குமாம்.



மேகலாயலா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் நீங்கள் யாருக்கு  வாக்களித்தீர்கள் என்று கேட்டு அதுதொடர்பான கணிப்பை முன்னணி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 



அதன்படி திரிபுராவில் பாக மீண்டும் ஆட்சியமைக்கும். அதேபோல நாகாலாந்து மாநிலத்திலும் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாம். மேகலாயாவில் பாஜகவுக்கு 3வது இடமே கிடைக்கும் என்று இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

மொத்தத்தில் வட கிழக்கில் பாஜக தனது கால்களை வலுவாக ஊன்றவுள்ளதை இந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.  பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் திரிபுரா மாநிலத்தில் பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான சீட்டுகளை விட ஒரு சீட் பாஜகவுக்கு அதிகம் கிடைக்கும் என்று இந்தக் கணிப்புகள் சொல்கின்றன.  திரிபுரா சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. இந்த மாநிலத்தை இடதுசாரிகள் கிட்டத்தட்ட 30 வருடம் ஆட்சி புரிந்தனர் என்பது நினைவிருக்கலாம். 

கடந்த 2018 தேர்தலில் இங்கு நடந்த தேர்தலில் இடதுசாரிகள் தோல்வியடைந்து  பாஜக ஆட்சியமைத்தது.  இடதுசாரிகளுக்கு இந்தத் தேர்தலில் 15 இடங்களே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியமே கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறியுள்ளது அக்கட்சியினரை அதிர வைத்துள்ளது.

திர்பாலான்ட் தனி மாநிலக் கோரிக்கையுடன் புதிய கட்சியைத்  தொடங்கி தேர்தலில் குதித்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த பிரத்யோத் கிஷோர் தெப்பர்மாவுக்கு 12 சீட் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 36 இடங்கள் கிடைத்தன என்பது நினைவிருக்கலாம். இந்த முறை அது குறையும் வாய்ப்புள்ளது.

மேகலாயாவைப் பொறுத்தவரை  அங்கு கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி தனிப் பெரும் கட்சியாக 20 சீட்டுகளுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாம். கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வென்ற பாஜகவுக்கு  இந்த முறை இங்கு 6 சீட் வரை கிடைக்குமாம்.  காங்கிரஸ் கட்சிக்கு 6 சீட் கிடைக்கலாமாம். முதல் முறையாக இங்கு போட்டியிட்டுள்ள திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 11 சீட் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

கடந்த முறை கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக இந்த முறை 60 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டுள்ளது. தற்போது திரினமூல் காங்கிரஸ் அதிக சீட்களைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் சக்தியாக அது உருவெடுக்கும் என்று தெரிகிறது.

நாகாலாந்து மாநிலத்தில் பாஜக - என்டிபிபி கூட்டணிக்கு 42 இடங்கள் கிடைக்கலாம். பெரும்பான்மைக்குத் தேவையானது 31 சீட் மட்டுமே.  என்பிஎப்  கூட்டணிக்கு 6 இடங்களும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்