சென்னை: டிவிட்டரில் புதிதாக 2 அம்சங்களை கொண்டு வரப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ஆனால் மேட்டர் என்னவென்று அவர் சொல்லவில்லை. மாறாக அதில் ஒன்று சிரிப்பை அதிகரிக்கும் இன்னொன்று நெகட்டிவ் என்று கூறி புதிர் போட்டு விட்டுப் போயுள்ளார்.
டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு வருவதற்கு முன்பு வரை பெரிய அளவில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் எலான் மஸ்க் வந்த பிறகு ஒவ்வொரு நாளும் விடிஞ்சா என்ன இருக்குமோ என்ற ரேஞ்சுக்கு பதக் பதக்கென்று போய்க் கொண்டிருக்கிறது.
அந்த அளவுக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு மாற்றம் என்று போய்க் கொண்டிருக்கிறார் எலான் மஸ்க். முதலில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினார். பின்னர் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். ப்ளூடிக் இனி இலவசம் கிடையாது. பணம் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகு வியூ லிமிட் கொண்டு வந்தார்.
தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை அவர் அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கிறார். இந்த நிலையில்தான் டிவிட்டருக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதியதொரு ஆப்பை கொண்டு வந்துள்ளது மார்க் சக்கர்பர்க்கின் மெட்டா. திரெட்ஸ் என்ற அந்த ஆப் இப்போது பெரும் வரவேற்பைப் பெற்று மக்களிடையே அலை பாய்ந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில்தான் புதிதாக ஒரு டிவீட் போட்டுள்ளார் எலான் மஸ்க். அதில், இந்த ஆப்பில், மற்ற எல்லாவற்றையும் சேர்த்தால் கூட கிடைக்காத அளவுக்கு புன்னகையும், மகிழ்ச்சியும் உங்களுக்கு விரைவில் கிடைக்கும். அதேசமயம், அதிர்ச்சி அடையாதீங்க.. அதில் சில நெகட்டிவான விஷயங்களும் கூட உள்ளன.. அதையும் முன்னாடியே சொல்லி விடுகிறேன் என்று கூறி புதிர் வைத்துள்ளார்.
"கண்ணா உனக்கு நான் ரெண்டு லட்டு தரப் போறேன்.. ஒன்னு இனிக்கும்.. இன்னொன்னு புளிக்கும்".. இப்படித்தான் இருக்கிறது எலான் மஸ்க் சொல்வதும்.. பார்க்கலாம், என்னதான் சொல்லப் போறார்னு.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}