வேற லெவலுக்கு மாறிய தர்மபுரி.. எம்.பி. செந்தில்குமார் என்ன பண்ணி வச்சிருக்கார் பாருங்க!

Jun 06, 2023,10:58 AM IST
தர்மபுரி: தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில் குமார் தனது தொகுதியில் அதி நவீனமான ஒரு பஸ் ஷெல்டரை  உருவாக்கி தொகுதி மக்களை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளார்.

தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் சமூக வலைதளங்களில் மட்டும்தான் களமாடுவார் என்று அவரது அரசியல் விமர்சகர்கள் கிண்டலடிப்பதுண்டு. ஆனால் சத்தம் போடாமல் தொகுதியைக் கலக்கிக் கொண்டிருக்கிறார் செந்தில்குமார்.



சமீபத்தில் தனது தொகுதியில் பல்வேறு வகையான நலத் திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக அவர் அறிவத்திருந்தார். அதில் ஒன்று பஸ் ஷெல்டர்கள் அமைப்பது. வித்தியாசமான மாதிரி ஏதாவது இருந்தால் பரிந்துரையுங்கள் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து ஒரு மாதிரியை ஒரு டாக்டர் பரிந்துரைத்திருந்தார். அது நன்றாகவே இருக்கவே அதே மாடலில் பஸ் ஷெல்டர்களை வடிவமைக்க முடிவு செய்தார் செந்தில்குமார்.

அத்தகைய பஸ் ஷெல்டரை தற்போது தர்மபுரி பேருந்து நிலையம் அருகே இந்த அதி நவீன பஸ் ஷெல்டர் அமைக்கப்பட்டஉள்ளது. உலகின் முதலாவது டபுள் டெக்கர் குளிர்சாதன வசித செய்யப்பட்ட, முழுமையாக சூரிய சக்தியால் இயங்கும் பஸ் ஷெல்டர் என்று பெருமையுடன் கூறியுள்ளார் டாக்டர் செந்தில்குமார்.



தர்மபுரி எம்.பி. வளர்ச்சி நிதியிலிருந்து இது கட்டப்பட்டுள்ளது. கல்ப் என்ஜீனியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மாதவ் இதை வடிவமைத்துக் கட்டியுள்ளார். இந்த ஷெல்டரில் பல்வேறு நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.  மொத்தம் 2 அடுக்குகளுடன் கூடியதாக இது உள்ளது. இதில் ஏடிஎம் மையம், ஓய்வெடுக்கும் அறை, குட்டி வணிகவளாகம், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை,  இன்டர்நெட் வசதி, குட்டி லைப்ரரி, டிவி வசதி, ரேடியோ கேட்கும் வசதி, படிக்கும் அறை,  செல்போன் சார்ஜ் போட்டுக் கொள்ளும் வசதி என எல்லாமே உள்ளது. 

வெளியில்பிரமாண்டமான எல்இடி திரையும் உள்ளது. வெளிநாடுகளில் இருப்பதைப் போல இதை வடிவமைத்துள்ளனர் என்பது சிறப்பானது. இந்த அதி நவீன பஸ் ஷெல்டர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற பஸ் ஷெல்டர்களை தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்க டாக்டர் செந்தில்குமார் திட்டமிட்டுள்ளாராம்.. பாராட்டலாம்.

VIDEO: தர்மபுரி அதி நவீன ஈரடுக்கு பஸ் ஷெல்டர்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்