கடவுள் நம்பிக்கை எந்த அளவில் இருப்பது நல்லது?

Jun 29, 2023,11:31 AM IST
- சுபா

கடவுள் நம்பிக்கை எந்த அளவில் இருப்பது நல்லது.. நிறையப் பேருக்கு இந்த சந்தேகம் வருவது இயற்கைதான். எந்த அளவுக்கு நாம் கடவுளை நம்ப வேண்டும்.. எந்த அளவுக்கு நாம் நம்பிக்கை வைப்பது சரியானது என்ற விவாதம் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

கடவுள் நம்பிக்கை என்பது கடவுளின் மீது உள்ள நம்பிக்கையாக இருக்கும் வரை எந்த தவறும்  இல்லை.  அதற்கு அளவு கோலும் இல்லை .. ஆனால் அவை மூட நம்பிக்கையாக மாறாமல் இருக்கும் வரை நல்லது. கடவுள்  மீது நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அது கண்மூடித்தனமானதாகவும் இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு நான் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவது எந்த தவறும் இல்லை அதற்காக உழைப்பும் நாம் போட வேண்டும் தினமும் படித்து இருக்க வேண்டும் படிக்காமல் எப்படி மதிப்பெண் பெற முடியும் ?? 


கடவுளை மட்டும் நம்பினால் போதாது.. மாறாக நாம் உழைக்கவேண்டிய நேரத்தில் உழைத்துவிடவேண்டும், என்பதையும் மறந்துவிடக் கூடாது... அப்புறம் கமல்ஹாசன் படத்தில் ஒரு வசனம் வரும்.. "கடவுள் இல்லைன்னு சொல்றான் பாரு அவனை நம்பலாம்.. கடவுள் இருக்காருன்னு சொல்றவனையும் கூட நம்பலாம்.. ஆனால் நான் தான் கடவுள்னு சொல்லிட்டு இருக்காங்க பாரு அதை மட்டும் நம்பாதே"ன்னு.. அது முழுக்க முழுக்க உண்மைங்க. 

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் அதனால் அடையும் நன்மைகள் அதிகம் என்பதை வலியுறுத்தவே இந்த பதிவு. "நம்பினார் கெடுவதில்லை! நான்கு மறை தீர்ப்பு!" எனகிறது இந்துமதம், "நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்!"என்கிறது கிறிஸ்தவம், எந்த அளவிற்கு இறைவனை நம்புகிறீர்களோ,அந்த அளவிற்கு அவன் அருள்புரிவான்" என்கிறது இஸ்லாம் மதம். அதேபோல்  கடவுள் நம்பிக்கையே பலரது மனக்காயங்களை ஆற்ற சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

மழை பெய்யும்போது உங்களால் மழையை நிறுத்த முடியாது. ஆனால் மழையிலிருந்து பாதுகாக்க குடை பிடிக்க உங்களால் முடியும், அது போல்தான்.. கடவுளால் உங்களது கஷ்டங்களை தவிர்க்க முடியாவிட்டாலும் நீங்கள் அதிலிருந்து தப்பிப்பதற்கும், அதனை தீர்ப்பதற்கும் உங்களுக்கு சில வழியை கொடுக்கும். அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு ஒரு சிறிய வட்டத்துக்குள் உங்கள் பிரார்த்தனைகளை அடைத்துவிடாதீர்கள்.

எனக்கு எது நல்லதோ அதை தா, என்று பிரார்த்தித்து உங்களை இறைவனிடம் ஒப்படைத்து விடுங்கள். மற்றவற்றை அவர் பார்த்துக் கொள்ளட்டும்.. நீங்க உங்களோட டூட்டியில் சரியா இருங்க.. எல்லாம் பெர்பெக்ட் ஆக நடக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்