ஷாருக்கான் மூக்கில் ஆபரேஷன் நடந்ததா?

Jul 05, 2023,09:34 AM IST

லாஸ்ஏஞ்சல்ஸ் : பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு மூக்கில் ஆபரேஷன் நடந்ததாக வந்த தகவல்களால் குழப்பம் ஏற்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த பரபரப்புக்கு மத்தியில் ஷாருக் கான் அமெரிக்காவிலிருந்து மும்பை திரும்பியுள்ளார்.

நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் எக்கனாமிக் டைம்ஸ் இதழில் ஒரு செய்தி வெளியானது. அதில், 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாலிவுட் டாப் ஹீரோ ஷாருக்கானின் அடுத்த பட ஷூட்டிங் நடந்து வந்தது. ஷூட்டிங்கின் போது ஷாருக்கானுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டி உள்ளது. முதலுதவி அளித்த பிறகும் ரத்த போக்கு நிற்காமல் இருந்தால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.



அங்கு ஷாருக்கானை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்த போக்கை நிறுத்துவதற்காக மைனர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். இதனால் ஷாருக்கானுக்கு மூக்கில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளார். கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஆபரேஷனுக்கு பிறகு ஷாருக்கான் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த விபத்து குறித்தோ, ஷாருக்கானுக்கு செய்யப்பட்டுள்ள ஆபரேஷன் பற்றியோ ஷாருக்கான் தரப்பிலோ, அவரது டீம் தரப்பிலோ எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதேசமயம், அப்படி எந்த ஆபரேஷனும் நடக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் கூறுவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டிருந்தது.

மும்பை திரும்பினார்

இப்படி ஒரு பக்கம் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ஷாருக் கான் நேற்று மும்பை திரும்பினார். அவரது முகத்தில் எந்தக் காயமும், ஆபரேஷன் நடந்ததற்கான அறிகுறியும் தெரியவில்லை. எனவே அவருக்கு மூக்கில் ஆபரேஷன் நடந்ததா என்பது குறித்து தொடர்ந்து தெளிவில்லாத நிலையே தொடர்கிறது.

சில ஆண்டு கால பிரேக்கிற்கு பிறகு ஷாருக்கான் நடித்த பதான் படம் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிசில் பதான் படம் ரூ.1000 கோடிகளை வசூல் செய்துள்ளது. அடுத்ததாக டைரக்டர் அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார் ஷாருக்கான். நயன்தாராவும் இணைந்து ஷாருக்கான் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 07 ம் தேதி ரிலீசாக உள்ளது.

இது தவிர தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஷாருக்கான் கமிட்டாகி உள்ளார். இந்த சமயத்தில் அவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டு, ஆபரேஷன் செய்யப்பட்டதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை கவலை அடைய செய்து விட்டது. ஆனால் தற்போது ஷாருக் கான் சூப்பராக மும்பை திரும்பியிருப்பது ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்