கட்சிக்காரர் செய்த கொலைக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த எடப்பாடி.. விளக்கிய ஸ்டாலின்

Mar 23, 2023,12:32 PM IST
சென்னை : கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக கிளைச் செயலாளர் செய்த ஆணவக் கொலை தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமாக பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தில், "கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல்நிலைய சரகம் கிட்டம்பட்டிலை சேர்ந்த ஜெகன் (வயது 28) என்பவர் மார்ச் 21 அன்று, பகல் 01.30 மணியளவில் கேஆர்பி அணை சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, முழுக்கான்கோட்டையை சேர்ந்த சங்கர் (அதிமுக கிளை செயலாளர்) உள்ளிட்ட மூவர், ஜெகனை வழி மறித்து தாக்கியதில், ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



இது தொடர்பாக காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரைண மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் குறித்த விசாரணையில், கல்லூரி ஒன்றில் இருண்டாம் ஆண்டு படித்து வரும் சங்கரின் மகள் சரண்யாவை, டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் காதலித்து பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு அழைத்துச் சென்று 26.01.2023 அன்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் உள்ளிட்டோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சங்கர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டவர் அவதானப்பட்டி அதிமுக கிளை செயலாளர் என்பது போலீசார் உறுதி செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பணிகளும் காவல் துறை சார்பில், மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூக நீதி காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம், அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, மனிதநேய அடிப்படையில் சமூக நலனை பேணி காக்க உதவிட வேண்டம் என இந்த மாமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

ஸ்டாலின் அளித்த இந்த விளக்கத்திற்கு அதிமுக தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதிமுக என்ற பெயரை முதல்வர் பயன்படுத்தியதற்கு அதிமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அவையில் சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது.ய்தி விளக்கத்தை உள்ளிடவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்