Odisha train accident... இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒரு ரயில் விபத்து நடந்ததில்லை.. பயங்கரம்!

Jun 03, 2023,07:58 AM IST

டெல்லி: இந்தியாவில் இதுவரை இப்படி ஒரு ரயில் விபத்து நடந்ததே இல்லை என்று கூறும் அளவுக்கு மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிஷா ரயில் விபத்து நடந்துள்ளது.


ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு நாட்டையே உலுக்கி விட்டது. 200க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த ஒடிஷா ரயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு டெக்னாலஜி எதுவும் பெரிதாக இல்லாத காலகட்டத்தில் இப்படி ஒரு விபத்து நடந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இப்போது அதி நவீனத் தொழில்நுட்பம் கையில் இருக்கும் சமயத்தில் இதுபோல விபத்து நடந்திருப்பது ரயில்வே பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.


பெங்களூரு - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சாலிமார் - சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை இணைந்து இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. 233 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒடிசாவின் பாலசோர் பகுதியில் இந்த விபத்து நடந்தது.




இந்தியாவில் பல விபத்துக்கள் நடந்துள்ளன. பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பெரும்பாலான விபத்துக்கள் ஒரு ரயில் அல்லது 2 ரயில்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கும். அவையும் கூட அரிதாகவே நடந்துள்ளன. ஆனால் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதியது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும்.


இதற்கு முன்பு 1981ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் உள்ள பாக்மதி ஆற்றில் ரயில் கவிழ்ந்து 750  பேர் பலியானார்கள்.  இதுதான் இந்தியாவில் நடந்த விபத்துக்களிலேயே அதிக அளவிலான உயிர்ச்சேதத்தை சந்தித்த விபத்தாகும். 


அதேபோல 1995ம் ஆண்டு புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயில் பிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதியதில் 305 பேர் பலியானார்கள். 1999ம் ஆண்டு பிரம்மபுத்திரா  மெயில் ரயிலானது, நின்று கொண்டிருந்த ஆவாத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. அதில் 285 பேர் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலானாவர்கள் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் ஆவர்.


1998ம் ஆண்டு ஜம்மு தாவி சியால்டா எக்ஸ்பிரஸ் ரயில், பஞ்சாப் மாநிலத்தில் கன்னா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பிரான்டியர் கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 212 பேர் பலியானார்கள்.


1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாம்பன் - தனுஷ்கோடி இடையிலான பாசஞ்சர் ரயில் புயலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதில் 126க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.


மிகப் பெரிய அளவில் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் அமல்படுத்தப்படுவதாக மத்திய ரயில்வே துறை தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இப்படிப்பட்ட சூழலில் எப்படி இப்படி 3 ரயில்கள் அடுத்தடுத்து வந்து மோதிக் கொண்டன என்பது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மனிதத் தவறுகளே இதற்கு முக்கியக் காரணமாக இருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் காரணம் சரியாக தெரிய வரும்.


சமீபத்திய செய்திகள்

news

Govt Holidays 2024: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்