அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் குழு ஒடிஷா விரைந்தது.. உதவி எண்கள் அறிவிப்பு

Jun 03, 2023,10:33 AM IST
சென்னை: ஒடிஷா ரயில் விபத்து  மீட்புப் பணிகளில் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டிலிருந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் குழு ஒடிஷா விரைந்துள்ளது. மேலும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷாவில் நேற்று இரவு நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 233 பேர் பலியானார்கள். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூர் -ஹவுரா பாஸ்ட் பாசஞ்சர் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதிக் கொண்டதில் இந்த பெரும் விபத்து நடந்து விட்டது.



மீட்புப் பணிகளில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் தமிழ்நாட்டு ரயிலும் சிக்கியிருப்பதால் தமிழ்நாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு அரசும் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார். 

மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். 

இந்நிலையில் ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகழும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா ரயில் விபத்து குறித்த உதவி எண்கள்:

தமிழ்நாடு அரசு ஒடிஷா ரயில் விபத்து தொடர்பான தகவல்கள் அறிய உதவி எண்களும் அறிவித்துள்ளது.

044-28593990
9445869843 
9445869848 (வாட்ஸ் ஆப் எண்)

காவல்துறை சார்பிலான அவசர கால உதவி எண்கள்:

044-28447701
044-28447703

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்