டெல்லி: கர்நாடக முதல்வர் பதவிக்கு மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகிறார். மே 20ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூரில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகின. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று 135 எம்எல்ஏக்களைப் பெற்றது. அதன் பின்னர் கடந்த நான்கு நாட்களாக முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் வேலைகள் டெல்லியில் நடந்து வந்தன.
காங்கிரஸ் கட்சியின் இந்தத் தாமதம் நாடு முழுவதும் பேசு பொருளானது. ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்க இத்தனை குழப்பமா என்ற விவாதம் கிளம்பியது. முன்னாள் முதல்வர் சித்தராமையா தன்னை முதல்வராக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். அவருக்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவும் உள்ளது.
அதேசமயம் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்������ுமாரும் முதல்வர் பதவியைக் கேட்டு வந்தார். சட்டசபைத் ���ா���்கிரஸுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிக்கு சிவக்குமாரின் கடுமையான உழைப்பும் முக்கியக் காரணம். மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் வாக்கு வங்கியான ஒக்கலிகா சமுதாயத்தினரின் வாக்குகளை பெருவாரியாக காங்கிரஸ் பக்கம் திருப்ப அவர் முக்கியக் காரணம் ஆவார்.
இப்படி இரு தலைவர்களும் பிடிவாதமாக இருந்ததால் காங்கிரஸ் மேலிடம் குழம்பிப் போனது. அவர்களுக்கும் இரு தலைவர்களையும் விட்டுக் கொடுக்கவும் முடியவில்லை. காரணம், இருவருமே முக்கியமானவர்கள். இதனால் முதல்வரைத் தேர்வு செய்வதில் குழப்பமும், தாமதமும் நிலவியது.
இந்த நிலையில் இரு தலைவர்களும் நேற்று ராகுல் காந்தியை தனித் தனியாக சந்தித்துப் பேசினர். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பின்போது டி.கே.சிவக்குமாருக்கு 2 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டது.
முதல் ஆப்ஷன் என்னவென்றால் - துணை முதல்வர் பதவி + கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவி + 6 அமைச்சர்கள். 2வது ஆப்ஷன் - 2 வருடங்களுக்கு சித்தராமையா முதல்வராக இருப்பார். மீதமுள்ள 3 வருடங்களுக்கு சிவக்குமார் முதல்வராக இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு ஆப்ஷன்களையும் சிவக்குமார் முதலில் நிராகரித்து விட்டார். . 2வது ஆப்ஷனை சித்தராமையாவும் கூட ஏற்கவில்லையாம். எனக்கு முதல்வர் பதவியைக் கொடுத்தால் கொடுங்கள்.. நான்கு ஆண்டு காலம் எனது உழைப்பைப் பாருங்கள். கட்சியை அடிமட்ட அளவில் வளர்த்துக் கொண்டு வந்துள்ளேன். எனவே முதல்வர் பதவியைக் கொடுங்கள்.. வேறு எதுவும் எனக்கு வேண்டாம் என்று கூறி விட்டாராம் சிவக்குமார். அதேசமயம், அவரது சம்மதம் இல்லாமல் சித்தராமையாவுக்குப் பதவி கொடுக்க ராகுல் காந்திக்கு விருப்பம் இல்லையாம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. சிவக்குமார் நிலைப்பாட்டில் மாற்றம் தென்படவே, சித்தராமையாவை முதல்வராக தேர்ந்தெடுக்க அவர் ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாக சித்தராமையா தேர்வை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரந்தீப் சிங் சுர்ஜிவாலா இதை அறிவித்தார். அதன்படி சித்தராமையா முதல்வராக பதவியேற்பார். துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் செயல்படுவார். நாடாளுமன்றத் தேர்தல் வரையும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும் சிவக்குமார் நீடிப்பார் என்று சுர்ஜிவாலா தெரிவித்தார்.
மே 20ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூரில் உள்ள கன்டீரவா உள்ளரங்க மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும். தகுதி வாய்ந்த தலைவர்கள் பலர் இருப்பதால் முதல்வர் தேர்வு தாமதமானதாக சுர்ஜிவாலா தெரிவித்தார்.
தலைவர்கள் திரள்கிறார்கள்
பதவியேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. காங்கிரஸ் உயர் மட்டத் தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இதில் பங்கேற்கிறார்கள். அத்தோடு தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களையும் விழாவுக்கு அழைக்க காங்கிரஸ் தலைமை தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பறை சாற்ற இந்த பதவியேற்பு விழாவை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. முதல்வர் பதவிக்கான சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால் கர்நாடக காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர். அடுத்து பதவியேற்பு விழாவை நோக்கி அவர்களது கொண்டாட்டங்கள் திரும்பியுள்ளன.
{{comments.comment}}