அப்பா, அம்மா முக்கியம்.. 15 வருஷம் பார்த்த வேலையை உதறிய சீனாவின் சூப்பர் மகள்!

May 29, 2023,10:04 AM IST
பீஜிங் : தனது பெற்றோருக்காக 15 வருடமாக வேலையை தூக்கி உதறி விட்டு, முழு நேர மகளாக மாறி உள்ள நியானன் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல் தான் சீன சோஷியல் மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள கட்டுரையில், 40 வயதாகும் நியானன் கடந்த 15 வருடங்களாக நியூஸ் ஏஜன்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.  2022 ல் தனது நிலையில் மாற்றம் வருவதை உணர்ந்தார் நியானன். அதிகப்படியான மனஅழுத்தத்தை உணர்ந்த அவர் ஒரு மாற்றம் வேண்டும் என சிந்தித்துக் கொண்டிருந்தார். இந்த இக்கட்டான நேரத்தில் தான் அவருக்கு உதவ அவரது பெற்றோர்கள் முன் வந்தனர்.



"பொருளாதார ரீதியாக உன்னை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். நீ ஏன் வேலையை விடக் கூடாது " என கேட்டனர். இது நியானனை சிந்திக்க வைத்தது. அது மட்டுமல்ல நியானனை ஊக்கப்படுத்துவதற்காக மாதம் 4000 யென்கள் (இந்திய மதிப்பில் ரூ. 46,000) தருவதாகவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

நியானன் பெற்றோர்கள் மாதம் 10,000 யென்களுக்கு மேல் பென்சன் வாங்கி வருகிறார்கள். பெற்றோர்கள் சொன்ன யோசனை படி தனது வேலையை உதறி விட்டு தற்போது முழு நேர மகளாக மாறி உள்ளார் நியானன். இப்போது எனது வேலை அன்பால் நிரம்பி உள்ளது என சந்தோஷமாக தனது தற்போதைய உணர்வை பகிர்ந்துள்ளார்.

தனது தினசரி வேலைகள் பற்றி அவர் குறிப்பிடுகையில், தினமும் காலை ஒரு மணி நேரம் பெற்றோருடன் டான்ஸ் ஆடுவதற்காக செலவிடுகிறேன். அவர்களுடன் சேர்ந்து வீட்டிற்கு தேவையான பொருட்கள் ஷாப்பிங் செய்கிறேன். மாலையில் அப்பாவுடன் சேர்ந்து இரவு உணவு தயாரிக்கிறேன். எலக்ட்ரானிக் தொடர்பான அனைத்து வேலைகளை கவனித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு டிரைவராகவும் இருக்கிறேன்.  மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா அல்லது வெளியில் செல்கிறோம்.

எனக்கு எனது பெற்றோர் சிகிச்சை அளித்து விட்டனர். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய மனஅழுத்தத்தில் நான் இருந்தேன். ஆனால் எனது பெற்றோர் அதிலிருந்து என்னை மீட்பு, நிம்மதியை உணர செய்து விட்டனர். அத்துடன் இதை விட உனக்கு தகுதியான, சரியான வேலை உனக்கு கிடைத்தால் நீ தாராளமாக போகலாம். உனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை என்றால் வீட்டிலேயே இரு. எங்களுடன் உனது நேரத்தை செலவிட என தெரிவித்துள்ளனர். 

ஆனால் 15 வருட பத்திரிக்கை பணி தராத புகழை, முழு நேர மகளாக மாறிய பிறகு பெற்றுள்ளார் நியானன். மாறுபட்ட இந்த வாழ்க்கை முறை வாழ்க்கையை நிச்சயம் சிறப்பானதாக, சுதந்திரமாக உணர செய்யும். ஆனால் அவர் தற்போது தனது பெற்றோரை சார்ந்து வாழ வேண்டி இருக்கும் சிலர் நியாயனின் இந்த செயலை விமர்சித்தும் வருகின்றனர். அதே சமயம் வேலை பளு காரணமாக கடும் மனஅழுத்தத்தை சந்தித்து வரும் இன்றைய இளைஞர்களிடம் இது வரவேற்பை பெற்றுள்ளது. வயதான பெற்றோர்களுக்கும் இது மன தெளிவை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்