தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு நிலவரம்.. ஜூலை 11ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Jul 09, 2023,05:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 11ம் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.


தமிழ்நாடு அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்துவது வழக்கமானது. அந்த வகையில் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஜூலை 11ம் தேதி அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபிக்கள், ஏடிஜிபிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.




இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துவார்.


சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ஆர். என். ரவி. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழவில்லை என்று கூறியிருந்தார். தொடர்ந்து பாஜக, அதிமுக தலைவர்களும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, கொலைகள் அதிகரித்து விட்டன என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதற்கேற்ப பல சம்பவங்களும் நடந்துள்ளன. 


தொடர்ந்து ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே உரசல் இருந்து கொண்டே வருகிறது. தற்போது ஆளுநர் டெல்லி போயுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியும் உள்ளார். இந்தப் பின்னணியில் முதல்வர் தலைமையில்,  சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் இது வழக்கமான கூட்டம்தான் என்று அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தக் கூட்டத்தின்போது அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுரைகள் பல்வற்றை சொல்லும் வாய்ப்புள்ளது. சமீபத்தில் கோவையில் டிஐஜி விஜயக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில், ஊக்கம் தரும் வகையில் முதல்வர் பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்