பிக்பாஸ் சீசன் 6 தமிழ்...டைட்டிலை வென்றார் அஜீம்

Jan 23, 2023,09:15 AM IST

சென்னை : விஜய் டிவியில் அதிக ரசிகர்களைக் கொண்ட, மிகவும் பிரபலமான ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். 100 நாட்களைக் கொண்ட இந்த ரியாலிட்டி ஷோவின் 5 சீசன்களும் முடிந்து, 6வது சீசன் தற்போது நடைபெற்று வந்தது. முதல் 5 சீசன்களை போல் இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். 21 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.


21 போட்டியாளர்களில் அஜீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 3 பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு சென்றனர். பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கையான ஷிவின் இறுதிப் போட்டிக்கு சென்றது ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் மற்றொரு முக்கிய சிறப்பு, இதில் சினிமா பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளாதது தான். சின்னத்திரை நடிகர்கள், சோஷியல் மீடியா பிரபலங்கள், சாமானியர்கள் மட்டுமே போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ஃபினாலே நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அஜீம், விக்ரமன் இருவருக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததால், டைட்டிலை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதிகமான கருத்துக்கணிப்புக்கள் அஜீமிற்கு ஆதரவாக வெளியாகின. சின்னத்திரை நடிகரான அஜீம், நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளை சந்தித்தார். இவரது கோபம் போன்ற பல விஷயங்கள் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 முறை அஜீம் நாமினேட் செய்யப்பட்டார். அதிக முறை நாமினேட் ஆன போட்டியாளர் இவர் தான். ஆனால் அதிர்ஷ்ட வசமாக கடைசி நிமிடத்தில் இவருக்கு ஓட்டளித்து மக்கள் இவரை காப்பாற்றி வந்தனர். இறுதிப் போட்டி வரை வந்த அஜீம், இறுதியில் டைட்டிலை வென்றுள்ளார். முதல் ரன்னர் அப்பை விக்ரமனும், இரண்டாவது ரன்னர் அப்பை ஷிவினும் பெற்றுள்ளனர். 


மக்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த விக்ரமன், தனது மக்கள் பணி தொடரும் என தெரிவித்தார். பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்ற அஜீமிற்கு பிரபலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முந்தைய சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்ற பிரபலங்கள் சிலர், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்