சென்னை : தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி அதிரவு உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இது பெரும் சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இதை சட்டப்படி சந்திப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது. சென்னை, கரூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள செந்தில் பாலாஜியின் உறவினர், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரைணக்காக கைது செய்து அழைத்துச் சென்றது.
விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு காவலில் வைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததால் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் சமீபத்தில் அவருக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை அடுத்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இருந்தாலும் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில் தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம், ஒருவர் 2 ஆண்டு தண்டனை பெற்றால்தான் பதவி நீக்கம் செய்ய முடியும் என்று கூறியிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் ரவி திடீரென செந்தில் பாலாஜியை நீக்கியுள்ளார்.
ஆளுநர் திடீர் நடவடிக்கை:
இன்று (ஜூன் 29) தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக கவர்னர் ரவி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி தவறாக பயன்படுத்தி உள்ளார். செந்தில் பாலாஜி மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என அமலாக்கத்துறையின் உத்தரவையும் சுட்டிக்காட்டி, கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஸ்டாலின் பதிலடி:
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி கவர்னர் பிறப்பித்த உத்தரவு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அமைச்சரை நீக்குவதற்கு கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.
ஆளுநரின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}