ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கனும்...கொந்தளிக்கும் பார்லிமென்ட்...அப்படி என்ன தான் பேசினார்?

Mar 13, 2023,12:55 PM IST

புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா பற்றி லண்டனில் பேசிய கருத்திற்கு இந்திய அரசும், எம்பி.,க்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். லோக்சபாவில் இது தொடர்பாக அமளி வெடித்தது. ராகுல் காந்தியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


ராகுல் காந்தியின் பேச்சால் ஏற்பட்ட அமளியால் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதியில் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்திய பேசிய விவகாரத்தை கையில் எடுத்து, அதானி விவகாரத்தை திசை திருப்ப முயற்சி செய்வதாக ஆளும் பாஜக மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ராகுல் காந்தி அப்படி என்ன தான் பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், பண மதிப்பிழப்பு முடிவானது இந்தியாவின் நிதி நிலையை பேரழிவுக்கு கொண்டு சென்று விட்டது. அது பற்றி பேச எங்களை அனுமதிக்கவில்லை. ஜிஎஸ்டி பற்றி பேசவும் எங்களை அனுமதிக்கவில்லை. சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது பற்றியும் பேசுவதற்கு எங்களை அனுமதிக்கவில்லை. 



பார்லிமென்ட்டில் இது பற்றி சூடான விவாதங்கள், அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றது. இருந்தாலும் நாங்கள் பார்லிமென்ட்டில் பேசியது நினைவில் உள்ளது. ஆனால் எங்களால் முடிவை பெற முடியவில்லை. ஒரு விவாதத்தில் துவங்கி, வேறு ஒரு விவாதமாக அது மாறி தான் போய் உள்ளது. பார்லிமென்ட்டில் எங்களின் மைக்குகள் நன்றாக இருக்கும். ஆனால் எங்களால் அதை ஆன் செய்து பேச முடிவதில்லை. பலமுறை நான் முயற்சி செய்தும் அது நடந்தது இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை பலமுறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. அப்போதெல்லாம் இது பற்றி நடந்தது இல்லை என ராகுல் பேசினார்.


அந்நிய மண்ணில் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் விதமாக ராகுல் காந்தி பேசியது முற்றிலும் தவறானது என எதிர்க்கட்சிகள் கொந்தளித்து கொண்டிருக்கின்றன. சோனியா காந்தி, தனது மகனை அடக்கி வைக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனாலும் பாஜக அரசு பிரச்சனைகளை திசை திருப்ப பேசுவதாக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர். இந்த பிரச்சனையை சமாளிக்க காங்கிரஸ் கட்சி தலைவர் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தியும் வருகின்றனர்.


சமீபத்திய செய்திகள்

news

சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!

news

அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!

news

தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!

news

Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்

news

நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்