பாஜக கொண்டு வந்த திட்டங்கள் சரியில்லாவிட்டால் தூக்கி எறியப்படும்.. கர்நாடக அமைச்சர்!

Jun 07, 2023,10:23 AM IST
டெல்லி:  கர்நாடகத்தில் ஆட்சி புரிந்த பாஜக அரசு கொண்டு வந்த சட்டங்கள், திட்டங்கள், மக்களுக்கு பயன் உள்ளதாக இல்லாவிட்டால், அவை நீக்கப்படும் என்று கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக என்டிடிவிக்கு பிரியங்க் கார்கே ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்ட பசு வதைத் தடுப்புச் சட்டம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் குந்தகமாக அமைந்து விட்டது. இதனால் மாநிலத்தின் மீது பெரும் நிதிச்சுமை இறங்க வழி வகுத்து விட்டது. 



பசு வதைச் சட்டம் மட்டுமல்லாமல், ஹிஜாப் தடை என எதுவாக இருந்தாலும், அது மக்களுக்கும், சமூக வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவாததாக இருந்தால் நிச்சயம் நீக்கப்படும்.  காங்கிரஸ் ஆட்சி, பொருளாதாரத்தை மட்டுமே பார்க்கிறது. இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை.

நாக்பூரில் உள்ள தங்களது முதலாளிகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது பசுவதைத் தடுப்புச் சட்டம். அது கால்நடை விவசாயிகளையோ அல்லது தொழில்துறையினரையோ எந்த வகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அவர்களுக்கு இதனால் எந்த லாபமும் கிடைக்கவும் இல்லை.

நிச்சயம் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நாங்கள் மறு ஆய்வு செய்வோம். பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற நிதிச் சுமையை ஏற்படுத்தக் கூடிய சட்டங்களை அப்படியே ஏற்க முடியாது என்றார் கார்கே. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவின் மகன்தான் பிரியங்க் கார்கே என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்