கனிமொழி பயணம் செய்து பாராட்டிய நிலையில்.. பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா நீக்கம்!

Jun 23, 2023,04:36 PM IST
கோவை : கோவையின் தனியார் பஸ் பெண் டிரைவர் ஷர்மிளா திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கோவையின் முதல் பெண் பஸ் டிரைவரான இவர் திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.



விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக பஸ் நிறுவனம் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தான் எந்த ஒரு விளம்பரமும் தேடவில்லை. தலைவர்கள் அவர்களாகவேதான் வருகிறார்கள். வருகிறவர்களை எப்படி நான் வராதீங்க என்று சொல்ல முடியும். என்னை அவமதிப்பது போல பேசினார் பஸ் உரிமையாளர். எனது தந்தையை அவமதிப்பது போல பேசினார்கள்.. வெளியே போங்க என்று கூறி விட்டனர்.. எனவே அப்பாவுடன் வெளியேறி விட்டேன் என்று ஷர்மிளா கூறியுள்ளார். 

திமுக எம்.பி.,யான கனிமொழி பயணம் செய்த போது பஸ்சில் டிக்கெட் வழங்குவதில் தகராறு ஏற்பட்டதாகவும், இதை ஷர்மிளா தட்டிக் கேட்டதாகவும், இதனால்தான்  அவரது வேலை போய் விட்டதாகவும் கூறப்படுகிறது. 

கோவையின் முதல் பெண் டிரைவர் என்பதால் பலரிடமும் ஷர்மிளா பாராட்டை பெற்று வந்தார். பயணிகள் பேருந்தை, கூட்ட நெரிசலுக்கிடையே அநாயசமாக அவர் ஓட்டும் விதமும், அவரது தன்னம்பிக்கையும் , தைரியமும் மக்களிடையே பெரும் புகழைத் தேடித் தந்தது. அவரைத் தேடி பலரும் வந்து பாராட்டிச் சென்றனர். 

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திடீர் விசிட் அடித்து ஷர்மிளாவைப் பாராட்டினார். பஸ்சில் பயணம் செய்து ஷர்மிளாவிற்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தார். இருவரும் சிரித்து பேசிய போட்டோக்கள் வெளியானதால் ஷர்மிளா, பெரிதும் பிரபலமாகி விட்டார். 



இந்த நிலையில் திமுக எம்.பி கனிமொழி எம்பி., யும் அதே பஸ்சில் பயணம் செய்துள்ளார். அவர் ஷர்மிளாவை பாராட்டினார். பெண்கள் பஸ் ஓட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ளார் ஷர்மிளா. அவருக்கு எனது பாராட்டுக்கள் என்று கூறி மனதார பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளித்தார் கனிமொழி. இந்த நிலையில்தான் பஸ்சுக்குள் திடீரென சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது கண்டக்டராக இருந்த பெண் திமுகவினரிடம் எடுத்தெறிந்து பேசியதாக கூறப்படுகிறது. மரியாதை இல்லாமல் அவர் பேசியதாகவும் டிக்கெட் வாங்குமாறு கூறி சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படிப் பேசாதீங்க என்று ஷர்மிளா அப்பெண்ணிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்பெண் தொடர்ந்து அவமதிப்பாகவே பேசியதாகவும் தெரிகிறது. 

இதனால்தான் காந்திபுரம் பஸ் நிலையம் வந்ததும் தனது உரிமையாளரிடம் இதுகுறித்து முறையிட தந்தையுடன் சென்றுள்ளார் ஷர்மிளா. ஆனால் உரிமையாளரோ விளம்பரம் தேடுவதற்காக இப்படி நடந்து கொண்டால் கண்டக்டர் அப்படித்தான் பேசுவார் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் கனிமொழி வருவது குறித்து தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்று அவர் கேட்டதாக தெரிகிறது. அதற்கு ஷர்மிளாவின் தந்தை, மேலாளரிடம் சொன்னேன் என்று கூறியுள்ளார். ஆனால் உடன் இருந்த மேலாளர் இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு கோபமடைந்த ஷர்மிளாவின் தந்தை, அப்ப நான் என்ன பைத்தியக்காரனா என்று கேட்க, உங்க பொண்ணைக் கூட்டிட்டு வெளியே போங்க என்று உரிமையாளர் சத்தம் போட்டதாக ஷர்மிளாவே கூறியுள்ளார்.



பஸ் உரிமையாளர் விளக்கம்

காலையிலிருந்து இரவு 11 மணி வரை தான் வேலை பார்த்ததாகவும், மனசாட்சியே இல்லாமல் தன்னை விளம்பரம் தேடுவதாக உரிமையாளர் கூறி விட்டதாகவும்  ஷர்மிளா வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ள நிலையில் மீடியாக்கள் சில ஷர்மிளா வேலை செய்த பஸ் நிறுவன உரிமையாளர் துரை கண்ணனைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டன. அப்போது அவர், ஷர்மிளாவை நான் வேலைக்கு வர வேண்டாம் என சொல்லவில்லை. அவருக்கும் பெண் கன்டக்டருக்கும் இடையே தான் பிரச்சனை. நிறுவனத்துடன் எந்த பிரச்சனையும் இல்லை. அவராகத்தான் வேலைக்கு வர விரும்பவில்லை என்று கூறிச் சென்றார் என்று விளக்கியுள்ளார்.

இதற்கிடையே, ஷர்மிளாவுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை போட்டுத் தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்