சென்னை : 1980 களில் கோலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் ராதா. பிறந்தது கேரளாவாக இருந்தாலும் கண்ணழகில் கோலிவுட் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர் ராதா. இவரும் இவரது சகோதரியான அம்பிகா, இணைந்து நடிக்காத டாப் ஹீரோக்களே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தென்னிந்திய மொழி சினிமாக்கள் அனைத்திலும் பிரபலமானார்.
பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் துவங்கி பல படங்களில் நடித்த ராதா, 1990 களில் சினிமாவை விட்டு ஒதுங்கி, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டிய ராதா, கேரக்டர் ரோல்கள் சிலவற்றிலும் நடிக்க துவங்கினார்.
ராதாவின் மகள்கள் துளசி மற்றும் கார்த்திகா இருவரும் சினிமாவில் நடிகையாக உள்ளனர். ஒரு காலத்தில் சினிமாவில் பிஸியாக இருந்த ராதா, தற்போது சோஷியல் மீடியாவில் செம பிஸியாக இருந்து வருகிறார். ட்விட்டரில் இவர் பதிவிடும் போஸ்டுகளுக்கு லைக்குகள் குவிவது வழக்கம். அப்படி லேட்டஸ்டாக ராதா பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றும் ரசிகள்களிடம் லைக்குகளை அள்ளி வருகிறது.
வெள்ளை நிற புடவையில், கருப்பு நிற ஜாக்கெட், தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து பிளாக் அன்ட் ஒயிட் பட நடிகைகள் கெட்அப்பில் போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராதா, " சில விஷயங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறுவதில்லை. வெள்ளை நிற புடவை, கருப்பு ஜாக்கெட், மல்லிகைப்பூ காம்பினேஷனுக்கு ஈடு இணையே கிடையாது" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
சிரிக்கும் அழகில் ராதா.. க்யூட் வீடியோ!
ராதாவின் இந்த காம்பினேஷனை பாராட்டி உள்ள ரசிகர்கள், இந்த வயதிலும் உங்களின் அழகும் கூட மாறவே இல்லை என ராதாவை புகழ்ந்து தள்ளி உள்ளனர். சிலர் ராதாவின் பழைய படங்கள், அவரின் நடிப்பு திறமை ஆகியவற்றையும் புகழ்ந்து தள்ளி உள்ளனர்.
ராதாவின் இந்த லேட்டஸ்ட் கலக்கல் வீடியோ பிளஸ் போட்டோவைப் பார்த்து விட்டு 50 + ரசிகர்கள் எல்லாம் "ஆயிரம் தாமரை மொட்டுக்களே" என்று பாடி வருகிறார்களாம்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!
98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!
பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!
Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!
Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!
Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
{{comments.comment}}