ரீல்ஸ் போட்டு கலக்கிய மீனா...இப்படி ஒரு வரவேற்பை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்!

Mar 25, 2023,04:46 PM IST
சென்னை : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுக, உச்ச நட்சத்திரமாக வலம் வந்து, ஏராளமான ரசிகர்களை தனக்கென வைத்திருக்கும் திரை பிரபலங்களில் நடிகை மீனாவும் ஒருவர். இவர் சேர்ந்த நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் துவங்கி தற்போதிருக்கும் அஜித், விஜய் வரை இணைந்து நடித்து விட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி சினிமாக்கள் அனைத்திலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, டாப் ஹீரோயின் ஆகி, தற்போது கேரக்டர் ரோல்களிலும் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த மீனா, மகள் நைனிகா பிறந்து, வளர்ந்த பிறகு, மலையாளத்தில் த்ரிஷ்யம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.



த்ரிஷ்யம், ப்ரோ டாடி என வரிசையாக மோகன்லாலுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து, அனைத்தையும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக்கி வருகிறார். மம்முட்டி, மோகன்லால்  என மலையாளத்தில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் மீனா, கணவர் வித்யாசாகரின் மறைவிற்கு பிறகு குட்டி பிரேக் எடுத்துக் கொண்டு, தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாவிலும் பிஸியாக இருக்கும் மீனா, ஆரம்பத்தில் மகள் நைனிகாவுடன் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை மட்டும் தான் வெளியிட்டு வந்தார். ஆனால் தற்போது ரீல்ஸ் வீடியோ, டான்ஸ் வீடியோ என பதிவிட்டு, தனது க்யூட்டான பெர்ஃபாமன்சால் சோஷியல் மீடியாவையும் கலக்கி வருகிறார்.

லேட்டஸ்டாக, ஆங்கில பட சீன் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்த வீடியோவை மீனா பகிர்ந்துள்ளார். அதில் அறைக்குள் இருந்து கோபத்துடன் சண்டை போட்டபடி வரும் நடிகை ஒருவர், வெளியில் கேமிராக்களை கண்டதும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். பிறகு இயல்பு நிலைக்கு வந்து சண்டையை தொடர்கிறார். பிறகு மீண்டும் ரியாக்ஷனை மாற்றி போஸ் கொடுக்கிறார். மீனாவின் இந்த க்யூட் பெர்ஃபாமன்ஸ் ரசிகர்களை கவந்துள்ளது. 

இன்று காலையில் அவர் பதிவிட்ட இந்த வீடியோவை தற்போது வரை 27,000 க்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். காந்த கண்ணழகி, முத்து பல்லழகி, இந்த வயசிலும் என்ன க்யூட்டா இருக்கார் என பலரும் மீனாவை புகழ்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

news

அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!

news

98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!

news

பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!

news

Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்