ஐதராபாத் : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரான சரத்பாபு, உடல்நலக்குறைவால் இன்று (மே 22) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
71 வயதாகும் சரத்பாபுவிற்கு சிறுநீரகம், கல்லீரல், நுழையீரல் ஆகியன பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக சோஷியல் மீடியாவில் வதந்திகள் பரவின. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும், தொடர் சிகிச்சையில் இருக்கும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் நம்பிக்கை தெரிவித்த சில நாட்களிலேயே சரத்பாபு உயிரிழந்திருப்பது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐதராபாத்தில் இருந்து அவரது உடலை சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், செலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் சரத்பாபு. தெலுங்கில் ராம ராஜ்யம் என்ற படத்தின் மூலம் 1973 ம் ஆண்டும், 1977 ல் தமிழில் பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலமும் அறிமுகமானார். தெலுங்கை விட தமிழில் அதிக படங்களில் குணசித்திர நடிகராகவும், வில்லன் ரோலிலும் நடித்துள்ளார்.
நினைத்தாலே இனிக்கும், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கம், சட்டம், சிப்பிக்குள் முத்து, வேலைக்காரன், சங்கர் குரு, அண்ணாமலை, நாளைய தீர்ப்பு, வேடன், கேப்டன், டூயட், முத்து, பாபா, புதிய கீதை, பேரரசு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2023 ம் ஆண்டில் தமிழில் வசந்த முல்லை என்ற படத்திலும், தெலுங்கில் மல்லி பெல்லி என்ற படத்திலும் நடித்தார். ரஜினி, கமல் ஆகியோரின் நண்பனாக இவர் நடித்த படங்களின் பட்டியல் மிக நீளமானது.
இவர்கள் தவிர விஜயகாந்த், விஜய் என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் சரத்பாபு.
Drumsticks: கிடுகிடு வென உயர்ந்து வரும் முருங்கை விலை.. கிலோ ரூ.100.. எப்படி சாம்பார் வைக்கிறது!
தங்கம் வாங்குபவர்களுக்கு தங்கமான நேரம்.. இன்று குறைந்துள்ள தங்கத்தோட விலை என்ன தெரியுமா?
புயல் சின்னம் எதிரொலி.. சென்னையில் 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை கன மழை பெய்யும்.. பிரதீப் ஜான்
Cyclone Memes: "நான்லாம் வந்தேன்னு வை.. புதுச்சேரியை இப்படி ஒரு புரட்டு..சென்னையை அப்படி ஒரு புரட்டு
பிரியங்கா காந்தி எனும் நான்.. அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்றார் பிரியங்கா காந்தி
மெல்ல நகர்ந்து வரும் புயல் சின்னம்.. நாளை மறுநாள் தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்
பொறுமையை சோதிக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. மெல்ல நகர்கிறது.. இன்றாவது புயலாக மாறுமா?
ஸ்லோவான புயல்.. ஏன் இந்தத் தாமதம்?.. காற்றின் வேக மாறுபாடுதான் காரணம்.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்
ஆழந்த காற்றழுத்தம்.. புயலாக மாறுவதில் தாமதம்.. 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்!
{{comments.comment}}