ஒரே வார்த்தையில் பொன்னியின் செல்வன் கதையை சொன்ன கார்த்தி... கலகலத்த கோவை!

Apr 19, 2023,03:34 PM IST
கோவை : பொன்னியின் செல்வன் படத்தின் கதையை நடிகர் கார்த்தி ஒரே வரியில் சொன்னதை கண்டு கோவை ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த கோலிவுட்டs மிரண்டு போய் உள்ளது. எப்படிய்யா இவர் ஒரே வரியில சிம்பிளா சொல்லி முடிச்சாரு என கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழில் வெளிவந்த மிக நீண்ட நாவல் என்ற பெருமையை பெற்றது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். இந்த நாவலை கல்கி மூன்று பாகங்களாக எழுதி, வெளியிட்டார். இந்த கதையை சினிமாவாக எடுக்கும் முயற்சியில் எம்ஜிஆர் முதல் பலரும் பல ஆண்டுகளாக முயற்சி செய்து தோற்றனர். கடைசியாக டைரக்டர் மணிரத்னம் பல ஆண்டு கால முயற்சிக்கு பிறகு பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்கினார். ஆரம்பத்திலேயே இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளதாக சொல்லி விட்டனர்.



பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2022 ம் ஆண்டின் இறுதியில் பான் இந்தியன் மூவியாக வெளியிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது. பல சாதனைகளையும் இந்த படம் முறியடித்தது என்றே சொல்லலாம். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஏப்ரல் 28 ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகளில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த நடிகர், நடிகைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கோவையில் நடந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ப்ரொமோஷன் நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தில் வரும் சிம்பிளான டயலாக்குகள் தனக்கு பிடிக்கும் என சொல்லி, தனக்கு பிடித்த சீன் ஒன்றை சொன்னார். அப்போது, "வந்தியத் தேவன் குதிரையில் போய் கொண்டிருக்கையில் பெரியவர் ஒருவர் கேட்பார், எங்கே போகிறாய் என்று. ஒரு சொத்து பிரச்சனை. அதற்கு நான் போய் தான் தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்காக தான் போய் கொண்டிருக்கிறேன் என்பான்.

அப்படி என்ன பிரச்சனை என அந்த பெரியவர் கேட்க, வந்தியத் தேவனோ, அது வேறு ஒன்றும் இல்லை. சொத்து, அண்ணன் மகனுக்கா இல்லை தம்பி பேரனுக்கா என்பது தான் என வந்தியத் தேவன் பதில் சொன்வான்" என்றார். உடனே ரசிகர்களை பார்த்த, "என்ன புரியுதா? அண்ணன் மகன் மதுராந்தகன். ரகுமான் சார் நடித்த கேரக்டர். தம்பி பேரனுக்கா சுந்தரச் சோழனின் மகன் ஆதித்ய கரிகாலனுக்கா என்பது. இதுக்கு மேலேயும் யாராவது கதை புரியலைன்னு சொன்னீங்கனா பிச்சுடுவேன் பிச்சு" என செல்லமாக ரசிகர்களை மிரட்டினார் கார்த்தி.

சூர்யா ஒரே மூச்சில் இலக்கியங்களில் வரும் பூக்களின் பெயர்களை சொல்லி தான் அசத்தினார் என்றால், கார்த்தி அதற்கும் ஒரு படி மேலே போய் பொன்னியின் செல்வன் கதையையே ஒரே வரியில் சொல்லி முடித்து விட்டாரே என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். கார்த்தி பேசிய இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்