ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்பு: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை இழக்கும்!

Mar 30, 2023,10:52 AM IST
டெல்லி: ஏபிபி சிவேட்டர் நடத்திய கர்நாடக சட்டசபைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில், பாஜக ஆட்சியை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. மே 10ம் தேதி வாக்குப்பதிவும், 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.



பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் பாஜக ஆட்சியை இழக்கும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அந்த வகையில் ஏபிபி - சி வோட்டர் இணைந்து ஒரு கருத்துக் கணிப்பைநடத்தி முடிவை வெளியிட்டுள்ளன. அதில்,  காங்கிரஸ் கட்சி 115 முதல் 127 இடங்கள் வரை பெற்று வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சாதாரண மெஜாரிட்டிக்குத் தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கை 113 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ல் நடந்த பொதுத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக 104 தொகுதிகளைப் பெற்ற பாஜக இந்த முறை 68 முதல் 80 இடங்கள் வரையே பெறும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.  கடந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேவே கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் இந்த முறை 23முதல் 35 இடங்கள் வரை வெல்லலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2018 தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வைத்து, குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால் ஆட்சி அமைத்து ஒரு வருடம் கூட நீடிக்காத நிலையில் பாஜகவின் சித்து வேலையால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களை காங்கிரஸ் விலைக்கு வாங்கி இழுத்ததால் ஆட்சி கவிழ்ந்தது.  அதைத் தொடர்ந்து எதியூரப்பா தலைமையில் ஆட்சி அமைந்தது. பின்னர் எதியூரப்பா விலகிக் கொண்டு பொம்மை முதல்வரானார்.

கர்நாடகத்தில் மொத்தம் 6 பிராந்தியங்கள் உள்ளன. மொத்த சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 224 ஆகும். பெங்களூரு, மத்திய கர்நாடகா, கடலோர கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகா,  மும்பை கர்நாடகா, தென் கர்நாடகா அல்லது பழைய மைசூர் ஆகியவையே அந்த பிராந்தியங்கள். இதில் மும்பை கர்நாடகாவும், தென் கர்நாடகாவம்தான் பெரிய பிராந்தியங்கள்.  மும்பை கர்நாடகாவில் 50 தொகுதிகளும், தென் கர்நாடகாவில் 51 தொகுதிகளும் உள்ளன.

ஏபிபி சிவோட்டர் சர்வேயில், காங்கிரஸ் கட்சிக்கு மும்பை கர்நாடகாவில் 25 முதல் 29 சீட் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 17 தொகுதிகள் மட்டுமே இங்கு கிடைத்தது. அதேசமயம், பாஜகவுக்கு,  21 முதல் 25 சீட் வரையே கிடைக்குமாம். கடந்த தேர்தலில் 30 சீட்களை இங்கு பாஜக அள்ளியது.

பழைய மைசூர் பகுதியில்,மதச்சார்பற்ற ஜனதாதளம் 26 முதல் 27 சீட் வரை பெறலாமாம். இது ஒக்கலிகா சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள பிரதேசம் ஆகும். இப்பகுதி ஒக்கலிகா மக்கள், காலம் காலமாக தேவே கெளடாவுக்குத்தான் ஆதரவாக உள்ளனர். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 24 முதல் 28 சீட் வரை கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சியின் ஒக்கலிகா முகமாக டி.கே.சிவக்குமார் இருக்கிறார். இப்பிராந்தியத்தில் பாஜகவுக்கு ஒரு சீட் கிடைக்கலாம் அல்லது அதிகபட்சமாக 5 சீட் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாம்.கடந்த தேர்தலில் 9 சீட்டை வென்றிருந்தது பாஜக

கடலோர கர்நாடகாவில் பாஜகவுக்கு 9 முதல் 13 சீட்டுகளும், காங்கிரஸுக்கு 8 முதல் 12 சீட்டுகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாம். மத்திய கர்நாடகாவில் பாஜகவுக்கு 12 முதல் 16 சீட்டுகளும், காங்கிரஸுக்கு 18 முதல் 22 சீட்டுகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளதாம்.

ஹைதராபாத் கர்நாடகாவில் பாஜகவுக்கு 8 முதல் 12 சீட்டுகளும்,காங்கிரஸ் கட்சிக்கு 19 முதல் 23 சீட்டுகளும் கிடைக்குமாம்.

பெங்களூரைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜகவுக்கு பெரிய மாற்றம் இருக்காதாம்.  இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 15 முதல் 19 சீட்டுகளும், பாஜகவுக்கு 11 முதல் 15 சீட்டுகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்