என்னது நடிகை சுனைனா கடத்தப்பட்டாரா?.. பரபரப்பை கிளப்பிய சர்ச்சை வீடியோ

May 22, 2023,03:34 PM IST
சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுனைனா. இவர் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவால் சோஷியல் மீடியா மட்டுமல்ல திரையுலகமே பரபரப்பாகி உள்ளது. போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா. அதற்கு பிறகு மாசிலாமணி, வம்சம், திருத்தணி, சமர், தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் விஷால் நடித்த லத்தி படத்தில் நடித்திருந்தார். சில வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இப்போது ரெஜினா என்ற படத்தில் நடித்து வந்தார் சுனைனா. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், சனிக்கிழமையன்று வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், தங்களின் ரெஜினா படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை சுனைனாவை திடீரென காணவில்லை. அவரது மொபைல் போனுக்கு கால் செய்தால் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அதோடு வீடியோவின் இறுதியில், அவரை யாராவது கடத்தி சென்று விட்டார்களா என்று கேள்வியும் எழுப்பி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள், சில பிரபலங்கள் ஆகியோர் பதற்றமாகி, கவலை தெரிவித்திருந்தனர். இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீசாரும் விசாரணையை துவக்கி விட்டனர்.

வீடியோ வெளியிட்ட எல்லோ பியர் ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்திடமே விசாரணையை துவக்கி உள்ளனர் போலீசார். அப்போது தான் தயாரிப்பு நிறுவனம் அந்த சர்ச்சை வீடியோ பற்றிய உண்மையை உடைத்துள்ளது. இது தாங்கள் தயாரிக்கும் ரெஜினா படத்திற்கான ப்ரொமோஷனின் ஒரு பகுதி என்று அவர்கள் கூறியதைக் கேட்டு கடுப்பாகி விட்டனர் போலீஸார்.

இப்படியெல்லாமா பரபரப்பைக் கிளப்புவது.. இதுபோல செய்யக் கூடாது என்று கூறி படக்குழுவினரை அழைத்து எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

புரமோஷன்னாலும்.. ஒரு அளவு இல்லையாய்யாய்யா!

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்