சென்னை: காதலர் தினத்தை கொண்டாட உலகமே ஒவ்வொரு விதத்திலும் தயாராகி வருகிறது. காதலின் மகத்துவத்தை தாங்கிப் பிடிப்பதில் சினிமாவிற்கு மிகப் பெரிய பங்குள்ளது. அப்படி இருக்கையில் திரையுலகம் மட்டும் காதலை கொண்டாட தவறுமா என்ன?
காதலர்களை மகிழ்விப்பதற்காக இந்த ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியன்று, 96 படத்தை ரீரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடு செய்து வருகிறது. 96, இந்திய காதலர்களின் மனங்கள் மட்டுமல்ல அனைத்து வயதினரின் மனதிலும் ஒளிந்து கிடந்த பழைய காதல் நினைவுகளை தூசி தட்டி எழுப்பி விட்ட படம். 2018 ம் ஆண்டு, டைரக்டர் சி.பிரேம் குமார் எழுதி, இயக்கிய படம். முதல் படத்திலேயே இளைஞர்கள் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து விட்டார்.
விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் ராம்- ஜானு கேரக்டராகவே வாழ்ந்திருந்த படம். கெளரி கிருஷ்ணா, பகவதி பெருமாள், தேவதரிஷினி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த படம். பழைய கால பள்ளி நினைவுகள், பள்ளி பருவ நட்பு, பள்ளிக் கூட முதல் காதல் என அனைத்தையும் மிக கச்சிதமாக கொடுத்திருந்த படம்.
கும்பகோணம், சென்னை, புதுச்சேரி, அந்தமான், கோல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த படம் படமாக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தாவின் இசை மிகப் பெரிய பிளஸ் என்றே சொல்லலாம்.
1996ம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்த நண்பர்கள், 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக சந்திக்கிறார்கள். இவர்களில் அந்த வகுப்பில் படித்து, காதலித்து, காதலை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே பிரிந்த ராம்-ஜானு ஜோடியும் ஒருவர். பள்ளி கால நண்பர்களுடன் சேர்ந்து பழைய காதலை சந்தித்து, தங்களின் பழைய உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவது தான் படத்தின் கதை. எளிமையான கதைக்களம் என்றாலும், அனைவரின் மனதிலும் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்திய படம். ரூ.18 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.50 கோடிகளை வசூல் செய்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் 6 விருதுகள், ஃபிலிம்ஜபேரில் 4 விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை அள்ளிக் குவித்த 96 படம் கன்னடத்தில் 99 என்ற பெயரிலும், தெலுங்கில் ஜானு என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. 96 என்ற பெயரை கேட்டதுமே அனைவரின் மனதிலும் வந்து போதும் ராம்-ஜானகி தற்போது காதலர் தினத்தை அனைவரும் சந்திக்க மீண்டும் வரப் போகிறார்களாம்.
அட ஆமாங்க...இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு 96 படத்தை ரீரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
LIC website.. இது தொழில்நுட்பக் கோளாறில்லை... அரசியல் கோளாறு.. மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!
கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
{{comments.comment}}