செப்டம்பரில் 92 லட்சம் பயணிகள்.. 1 கோடியை நோக்கி வேகமாக விரையும்.. சென்னை மெட்ரோ!

Oct 01, 2024,06:36 PM IST

சென்னை:   சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். விரைவிலேயே 1 கோடி பயணிகள் என்ற சாதனை இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது மெட்ரோ நிறுவனம்.


சென்னை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இன்று மெட்ரோ ரயில்கள் மாறி நிற்கின்றன. ஒரு காலத்தில் பல்லவன் தான் சென்னை மாநகர போக்குவரத்தின் அடையாளமாக இருந்தது. பிறகு புறநகர் ரயில்கள் மிகப் பெரிய அடையாளமாகின. இப்போது அந்த இடத்தை மெட்ரோ பிடித்து விட்டது. மெட்ரோ இல்லாத சென்னையை நினைத்துப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மெட்ரோ பயணம் மக்களின் முக்கிய அங்கமாகியுள்ளது.




பெருமழை வெள்ளக் காலத்தில் மக்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவியாக இருந்தது மெட்ரோ ரயில்கள்தான். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம்  பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக  சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


2024 செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.


நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மேமாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும்,  ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும்  மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும்  மெட்ரோ ரயில்களில்பயணம் செய்துள்ளனர்.


அதிகபட்சமாக 06.09.2024 அன்று 3,74,087 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


2024, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 30,99,397 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 7,319 பயணிகள், குழு பயணச்சீட்டு(Group Ticket) முறையை பயன்படுத்தி 7,149 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,73,640 பயணிகள் (Online QR 1,76,890; Paper QR 21,91,054; Static QR 2,58,952; Whatsapp - 5,92,360; Paytm 4,41,609; PhonePe – 3,30,305; ONDC – 82,470), மற்றும்   சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,90,192 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.


மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!

news

கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

அதிகம் பார்க்கும் செய்திகள்