புஷ்பா 2 தியேட்டர் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவனுக்கு.. வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம்!

Dec 18, 2024,06:59 PM IST

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா படம் திரையிடப்பட்ட தியேட்டரில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் தரப்படுவதால் அவனது உடல் நிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது.


டிசம்பர் 4ம் தேதி புஷ்பா படம் திரையிடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில்  எப்போதுமே நடிகர் அல்லு அர்ஜூன் தனது படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது வழக்கம். ஆனால் புஷ்பா 2 படம் திரையிடப்பட்டபோது அவரது வருகை முதலில் அறிவிக்கப்படாமல் இருந்துள்ளது. காரணம், பெரும் கூட்டம் கூடியிருந்ததால். பின்னர் தனது குடும்பத்துடன் அல்லு அர்ஜூன் படம் பார்த்துள்ளார்.


அல்லு அர்ஜூனைப் பார்த்ததும் கூட்டம் முண்டியடித்தது. அவருடன் புகைப்படம் எடுக்க, செல்பி எடுக்க என கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் பலர் நெரிசலில் சிக்கிக் கொண்டனர். அதில் ரேவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 8 மகன் தேஜ் என்பவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர்.




தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் தேஜின் உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தற்போது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  சிறுவனுக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.


ஹைதராபாத்தின் கிம்ஸ் மருத்துவமனையில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது. சிறுவனின் மூச்சுக் குழாயில் செயற்கையாக ஒரு பைப்பை பொருத்தி சுவாசத்தை எளிமையாக்கும் திட்டம் டாக்டர்களிடம் உள்ளது. அதைச் செய்தால் வென்டிலேட்டர் இல்லாமல் சுவாசிக்க முடியுமாம். சிறுவனின் மற்ற உடல் உறுப்புகள் நார்மலாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடை.யே ஹைதராபாத் மாநகர காவல்துறை ஆணையர் சி.வி. ஆனந்த் சிறுவனை நேரில் சந்தித்து அவனது உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், சிறுவன் தேஜ் இயற்கையாக சுவாசிக்கவில்லை. மீண்டு வருவதற்கு நிறை காலம் எடுக்கும் என்றார்.


சந்தியா தியேட்டர் விவகாரம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர், காவலர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அல்லு அர்ஜூன் கைதுக்குப் பிறகு புஷ்பா 2 படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்