டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பு.. குடவோலை முறையை பறை சாற்றிய தமிழக அலங்கார ஊர்தி!

Jan 26, 2024,08:57 PM IST

டெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பம்சமாக பல்வேறு மாநிலங்களின் அலங்கார  ஊர்திகள் அழகுற அணிவகுத்து வந்தன. தமிழ்நாட்டின் சார்பில் உத்திரமேரூர் குடவோலை முறை குறித்த ஊர்தி அணிவகுத்து வந்தது.


டெல்லி கர்தவ்யா பாதையில் கோலாகலமான குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்த இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பெண்களின் சக்தி கம்பீரமாக வெளிப்படுத்தப்பட்டது.


முப்படையினர் உள்பட பல்வேறு படையினரின் பெண் வீராங்கனைகள் கலந்து கொண்ட அணிவகுப்புதான் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. வழக்கமாக வீரர்களின் ஆதிக்கமே இதுபோன்ற நிகழ்வுகளில் இருக்கும். ஆனால் முதல் முறையாக ஏராளமான பெண் வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர்.




முப்படையினர், என்சிசி, என்எஸ்எஸ், சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ திபெத் எல்லைப் படை என பல்வேறு படையினரின் பெண் வீராங்கனைகள் அணி அணியாக வந்தது பார்க்கவே படு ஜோராக இருந்தது. கம்பீரமாக இருந்தது.


பெண் வீராங்கனைகள் நடந்து வந்த கம்பீரத்தைப் பார்த்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் எழுந்து நின்று கைகளைத் தட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் அணிவகுப்பை கண்டு ரசித்தனர்.


அதன் பின்னர் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. அருணாச்சல் பிரேதசத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு மாநிலமாக அணிவகுத்து வந்தன. அருணாச்சல் பிரதேசத்தைத் தொடர்ந்து, ஹரியானா, மணிப்பூர், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, சட்டிஸ்கர், ராஜஸ்தான்,  மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், லடாக் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் வந்தன.


இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுத்து வந்தது. அதில், உத்திரமேரூரின் குடவோலை முறை குறித்த தீமுடன் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. அட்டகாசமான பாடலுடன் தமிழ்நாடு ஊர்தி அணிவகுப்பில் கலந்து கொண்டது.  தமிழ்நாட்டைத் தொடர்ந்து குஜராத், மேகாலயா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், தெலங்கானா மாநில ஊர்திகள் வலம் வந்தன.


உத்தரப் பிரதேச மாநில அரசின் சார்பில் அயோத்தியை பிரதானப்படுத்தி அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. 


மாநிலங்களின் ஊர்திகளைத் தொடர்ந்து இஸ்ரோ உள்ளிட்ட 9 அரசுத் துறை நிறுவனங்களின் ஊர்திகள் அணிவகுத்து வந்தன. இஸ்ரோ சார்பில் வந்த ஊர்தியில் சந்திரயான் பிரதானப்படுத்தப்பட்டிருந்தது.


சமீபத்திய செய்திகள்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

news

திருச்சி கோர்ட்டில் சீமான்.. 6 ஆடியோ ஆதாரங்களை ஒப்படைக்க டிஐஜி வருண் குமாருக்கு உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்