75வது குடியரசு தின விழா.. சென்னையில் கோலாகலம்.. ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியேற்றினார்

Jan 26, 2024,08:59 AM IST

சென்னை: 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கடற்கரை காமராசர் சாலையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியேற்றி வைத்தார்.


சென்னை கடற்கரைச் சாலையில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா நடைபெறும். இந்த ஆண்டும் அதேபோல விழா கொண்டாடப்பட்டது. உழைப்பாளர் சிலை அருகே நடந்த விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், காவல்துறை, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


காலை 8 மணிக்கு விழா மேடைக்கு வந்த ஆளுநர் ஆர். என். ரவி பின்னர் தேசியக் கொடியை ஏற்றினார். தேசிய கீதம் இசைக்க தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு முதலில் நடைபெற்றது. அதன் பின்னர் பல்வேறு  அலங்கார ரத அணிவகுப்பு நடைபெற்றது.




இதையடுத்து பல்வேறு வீர தீர விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பை, சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது , முதலமைச்சரின் சிறப்பு விருது உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 


மதுரை கொடிக்குளம் ஆயி பரிபூர்ணம் அம்மாள் தனக்குச் சொந்தமான  ரூ. 7 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்குத் தானமாக அளித்துள்ளார். அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது அளித்துக் கெளரவிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து தற்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு குழுவாக வந்து மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அதேபோல பல்வேறு மாநிலக் கலைக்குழுக்களின் நடன நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.


குடியரசு தின விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களிலும் குடியரசு தின விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது.


முதல்வரிடமிருந்து விருதுகள் பெற்றோர் விவரம்:


ஆல்ட் நியூஸ் நிறுவனரான முகம்மது ஜூபேருக்கு, கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது அளிக்கப்பட்டுள்ளது. இவர் பொய்ச் செய்திகளைக் கண்டறிந்து அம்பலப்படுத்தி வருகிறார். இதற்காக சிறைக்கும் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மதுரை ஆயி பரிபூர்ணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக தானமாக அளித்து மக்கள் மனங்களில் உயர்ந்தவர் ஆயி அம்மாள்.


தூத்துக்குடி சிவக்குமார், நெல்லை டேணியல் செல்வசிங், சிங்கித்துறை மீனவரான யாசர் அராபத் ஆகியோருக்கு அண்ணா பதக்கம் அளிக்கப்பட்டது. இவர்கள் தூத்துக்குடி, நெல்லை வெள்ளத்தின்போது பலரை மீட்டுக் காப்பாற்றியவர்கள், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு பலரையும் காத்தார்கள்.


சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது அளிக்கப்பட்டது.


சிறந்த காவல் நிலையங்களுக்கான முதல் பரிசு மதுரைக்கும், 2வது பரிசு நாமக்கல், 3வது பரிசு பாளையங்கோட்டைக்கும் கிடைத்தது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்