கோவையில்.. கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது.. ஏன்?

Nov 08, 2023,11:14 AM IST
கோவை: கோவையில் ஜூனியர் மாணவரை மொட்டை அடித்து ராகிங் செய்ததாக, ஏழு கல்லூரி  மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி  தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் ஏழு பேர் சேர்ந்து ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் குடிக்க பணம் கேட்டுள்ளனர் . முதலாம் ஆண்டு மாணவர் பணம் தர மறுத்துள்ளார் .

இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் ஏழு பேர் முதலாமாண்டு மாணவரை மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.



பாதிக்கப்பட்ட மாணவருடைய பெற்றோர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் மொட்டையடித்து ராகிங் செய்ததாக மாதவன், சந்தோஷ், மணி, யாலிஸ், தரணிதரன் ஐயப்பன், வெங்கடேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்தனர்.

1998 ஆம் ஆண்டு ஜூலை 30ம் தேதி தமிழ்நாட்டில் ராகிங் தடுப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. பொது இடங்களில் பெண்களை கேலி செய்வதை கண்டித்து தமிழகத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே கல்வித்துறை கல்லூரி மற்றும் பொது இடங்களில் ராகிங் செய்வதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வந்தது. இதனை தடுக்க பல சட்டங்களில் இருந்தும் இது போன்ற அநாகரீக செயல்கள் அரங்கேறி வருகிறது. இச்செயல் பல உயிர்களையும் பறித்துள்ளது. இப்போதும் கூட ராகிங் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனியும் இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் நடக்காமல் இருக்க ஒவ்வொரு கல்லூரியும் மறைமுகமாக புகார் பெட்டி ஒன்றை வைக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் இதன் மூலம் புகாரை பதிவு  செய்து ,ராகிங் செய்யும் நபரை பெற்றோர் மூலமாக கண்டித்து தக்க தண்டனை கொடுக்கலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் ராகிங் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வரலாம். இது போன்ற ஐடியாக்களை கல்வித்துறை செயல்படுத்தினால் ராகிங் நடப்பதை தவிர்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

அதிகம் பார்க்கும் செய்திகள்