7 மாநில சட்டசபை இடைத் தேர்தல்.. இந்தியா கூட்டணிக்கு 10.. பாஜக 2, சுயேச்சை 1 இடத்தில் வெற்றி

Jul 13, 2024,05:10 PM IST

டெல்லி: 7 மாநிலங்களில் 13 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி பத்து இடங்களில் வென்றுள்ளது. பாஜகவுக்கு  2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு இடத்தை சுயேச்சை வென்றுள்ளார்.


மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாடு தழுவிய அளவில் நடந்த ஒரு பெரிய தேர்தல் என்பதால் இந்த இடைத் தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது. 


மேற்கு வங்காள மாநிலத்தில் 4 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 3, உத்தரகாண்ட் 2, தமிழ்நாடு, பீகார், பஞ்சாப், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தலா 1 சீட் என ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.





மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை 4 தொகுதிகளிலும் திரினமூல் காங்கிரஸ் வென்றுள்ளது. இதில் 3 தொகுதிகளில் கடந்த முறை பாஜக வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் வென்ற 3 பாஜக எம்எல்ஏக்களும் பின்னர் திரினமூல் காங்கிரஸுக்குத் தாவி விட்டனர். அந்தத் தொகுதிகளில்தான் தற்போது திரினமூல் காங்கிரஸ் வென்றுள்ளது..


இமாச்சல் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சுக்விந்தர் சிங் சுக்குவின் மனைவி கம்லேஷ் தாக்கூர் தேரா தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற இரு தொகுதிகளில் ஹமீர்பூர் தொகுதியில் பாஜக வென்றுள்ளது. இன்னொரு தொகுதியை காங்கிரஸ் வென்றது.


உத்தரகாண்ட் மாநிலத்தில், மங்களூர், பத்ரிநாத் ஆகிய இரு தொகுதிகளிலும் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு கிடைத்துள்ளது. இரண்டு தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. அதாவது காங்கிரஸ் வென்றுள்ளது.


பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.  பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து தேர்தல் நடந்த தொகுதியில் சுயேச்சை வெற்றி பெற்றார்.


தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் திமுக அபார வெற்றி பெற்றது. மத்தியப் பிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கம்லேஷ் ஷா வெற்றி பெற்றார்.


மொத்தம் தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 2 தொகுதியில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. 10 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ள நிலையில், ஒரு தொகுதியை சுயேச்சை கைப்பற்றியுள்ளார். இடைத் தேர்தல் நடைபெற்ற 7 மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. 3 மாநிலங்களில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.


இந்தியா கூட்டணி வென்ற தொகுதிகள்


மங்களூர் (காங்கிரஸ்), பத்ரிநாத் (காங்கிரஸ்), தேரா (காங்கிரஸ்), நலகார் (காங்கிரஸ்), ஜலந்தர் மேற்கு (ஆம் ஆத்மி), ரனகாட் தக்சின் (திரினமூல் காங்கிரஸ்), பக்தா (திரினமூல் காங்கிரஸ்), ரெய்காஞ்ச் (திரினமூல் காங்கிரஸ்), மணிகதலா (திரினமூல் காங்கிரஸ்), விக்கிரவாண்டி (திமுக) 


பாஜக வென்ற தொகுதிகள் 


ஹமீர்பூர், அமர்வரா


ருபாலி (சுயேச்சை)

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்