- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து ,கிழக்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும், அது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ,தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு விட்டு விட்டு கன மழை கொட்டித் தீர்த்தது.
இன்று மழை நிலவரம்:
கடலூர் , நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம்.
சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதலிலேயே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்றும் காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தனர்.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
{{comments.comment}}