சியோல்: தென் கொரியாவில் தரையிறங்கும் போது பயணிகள் விமானம் தீப்பிடித்து, விபத்திற்குள்ளானது இதில் 181 பேர் பலியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்த எவரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
தென் கொரியாவில் உள்ள முயன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்க முயன்ற போது பறவை ஒன்று விமானத்தில் மோதி உள்ளது. இதனால் மாற்று ஓடு பாதையில் விமானத்தை தரையிறக்க கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கிடைப்பதற்குள் விமானம் வழக்கமான ஓடு பாதையில் தரையிறங்க துவங்கி விட்டது. விமானியின் கட்டுப்பாட்டை மீது விமானம் வேகமாக தரையிறங்கிய போது அருகில் உள்ள சுவரில் மோதி விமானத்தின் முன்பகுதி முழுவதும் எரிந்து தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானது.
இந்த விமானத்தில் 181 பேர் வரை பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. இவர்களில் ஒருவர் கூட உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. தொடர்ந்து விமானத்திற்குள் சிக்கி இருக்கும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதனால் ஜிஜூ விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினர்கள் விமானநிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
விமான விபத்து நடைபெற்ற இடத்தில் விமானத்தில் வால் பகுதி மட்டுமே அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பதாகவும், மற்ற பகுதிகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 1500 க்கம் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், மீட்பு படை வீரர்கள், அதிகாரிகள் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜிஜூ விமான நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மட்டும் இதுவரை 6 பயணிகள் விமானம் விபத்திற்குள்ளாகி உள்ளது. இதற்கு முன் அஜர் பைஜானில் 67 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 38 பேர் பலியாகி இருந்தனர். அதே போல் பப்புவா நியூ கினியா, அர்ஜண்டினா, ஹவாய் என இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் தொடர்ந்து விமான விபத்துக்கள் நடந்து பல உயிர்கள் பலியாகி உள்ளனர். இந்த 6 விமான விபத்துக்களில் இதுவரை மொத்தம் 234 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கெளதம் கம்பீர், ரோஹித் சர்மாவை நேரில் அழைத்து விசாரிக்க பிசிசிஐ முடிவு.. தொடர் தோல்விகளால் கோபம்!
7ஜி ரெயின்போ காலனியை கையில் எடுத்த செல்வராகவன்.. terrible comboவுடன்.. செம அப்டேட்!
2025ம் ஆண்டின் முதல் அதிரடி.. தடாலடியாக தனது பெயரை மாற்றினார் எலான் மஸ்க்!
Happy New Year 2025.. பிறந்தது 2025.. இந்தியா முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன்.. தெறிக்க விட்ட மக்கள்
மார்கழி 18 - திருவெம்பாவை 18 - அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
மார்கழி 18 - ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 18 - உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
2025 வருக வருக.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
திருவள்ளுவரைக் கொண்டாடிக் கொண்டே இருப்போம்.. அது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
Happy Pongal மக்களே.. ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்!
{{comments.comment}}