Loksabha Elections: விறுவிறுப்பான 6வது கட்ட தேர்தல்.. கடும் வெயிலிலும் மக்கள் ஆர்வம்

May 25, 2024,11:52 AM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை  7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல மாநிலங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். 


முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை செலுத்தினர். 


லோக்சபா தேர்தல் ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், இன்று ஆறாம் கட்ட தேர்தல் கோலாலமாக நடைபெற்று வருகிறது. ஆறு மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஆறாம் கட்ட லோக்சபா தேர்தலில் 11.13 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 5 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், மற்றும் 5 கோடியே 29 லட்சம் பேர் பெண்கள் ஆவர். மேலும் 5 ஆயிரத்து 120 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இது தவிர பீகாரில் 8 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


தலைநகர் டெல்லியில் ராணுவ படையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணிகள் ஈடுபட்டுள்ளனர்.  டெல்லி மாநகரம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 641 வாக்கு சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆறாம் கட்ட தேர்தலில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி,  ஆகியோர் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், முன்னாள் மத்திய அமைச்சர் சுவராஜ் சுஷ்மா மகளும்  பாஜக வேட்பாளருமான பன்சூரி சுவராஜ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கினை செலுத்தினார்கள். 




ஹரியானா கர்னல் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்களித்தார். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ரகசியமாக நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்...வாழ்த்து மழையில் நனைந்த தம்பதிகள்..!

news

கூட்டணி தொடருமா?...முதல்வருடன் பேசியது என்ன?...திருமாவளவன் அளித்த பளிச் பதில்

news

மறுபடியும் வந்துட்டோம்...புதிய பட அறிவிப்பை வெளியிட்டார் லெஜண்ட் சரவணன்

news

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு...கைதானவர் சிறையில் தற்கொலை

news

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்..!

news

கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டில்லியின் அடுத்த முதல்வர் யார்?

news

மதுவிலக்கால் கூட்டணியில் பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்...திருமாவளவன் அதிரடி

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம்... சவரன் ரூ.55,000ஐ தாண்டியது

news

அக்டோபர் 3வது வாரத்தில் விஜய் கட்சி மாநாடு? அனுமதி கேட்டு மீண்டும் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்