மும்பை: மஹாராஷ்டிராவின், புனே மாவட்டத்தில் கர்ப்பிணிகள் 26 பேர் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ்சால் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 68 முதல் 78 வயது உடையவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த ஜூன் மாதம் 46 வயதான டாக்டர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் சில நாட்களிலேயே அவரது மகளுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது 26 கர்ப்பிணிகள் உட்பட 66 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டால், அவரது கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்குகிறது. குறிப்பாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை எற்படுத்தக் கூடும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த ஜிகா வைரஸ் பாதிப்பு மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் நான்கு பேர் உயிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் இந்த வைரஸ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறதாம். அவர்கள் இந்த வைரசால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனராம்.
நோய்க்கான அறிகுறிகள்:
டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களின் மூலமாக பரவி வருவது தான் ஜிகா வைரஸ். இந்த ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்டு 3 அல்லது 7 நாட்களுக்கு பிறகு தான் உடலில் அறிகுறிகள் காணப்படும். காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இதுவரை இந்த நோய் தொற்றிற்கு எந்த வித தடுப்பூசியும் கண்டு பிடிக்கப்படவில்லை. முதன்முதலில் இந்த வைரஸ் 2016ம் ஆண்டு குஜராத்தில் கண்டறியப்பட்டது. இதன்பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.
அதிக ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகள் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். கொசுக்கடி மூலம் இந்நோய் பரவுவதால் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பாத்து கொண்டால் இந்நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}