70வது தேசிய விருதுகள்.. 2 தமிழ்ப் படங்களுக்கு.. சிறந்த நடிகை, சிறந்த இசை உள்பட 6 விருதுகள்!

Aug 16, 2024,03:27 PM IST

டெல்லி:   2022ம் ஆண்டிண்கான 70வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளில் தமிழ் மொழிக்கு மட்டும் ஆறு விருதுகள் கிடைத்துள்ளன. பொன்னியின் செல்வன் 1 மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய 2 படங்களில் இருந்து இந்த விருதுகள் கிடைத்துள்ளன.


ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால்  இந்திய மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களுக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர்  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படு. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.




2022ம் ஆண்டு தமிழில் வெளிவந்த  சிறந்த  பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு கிடைத்துள்ளது. பெரும்பான்மையாக  4 விருதுகள் இப்படத்திற்கு கிடைத்துள்ளது. 2022இல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் தமிழ் திரையுலகின்  முக்கிய நடிகர் மற்றும் நடிகையர் நடித்திருந்தனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். வரலாற்று காவியத்தை படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் மணிரத்னம். இப்படம் 2 பாகங்களாக வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.


2022ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதில் பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. 


பொன்னியின் செல்வன் 1 படம் பெற்ற விருதுகள்


சிறந்த திரைப்படம்

சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரஹ்மான்)

சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்)

சிறந்த ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி)



திருச்சிற்றம்பலத்திற்கு 2 விருதுகள்




இதே போல 2022ம் ஆண்டு வெளிவந்த  திருச்சிற்றம்பலம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன் அசத்தலாக நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ஷோபனா என்ற கேரக்டரில் அட்டகாசமாக நடித்திருந்தார் நித்யா மேனன். சமீபத்தில்தான் பிலிம்பேர் விருதைப் பெற்றிருந்தார் நித்யா மேனன். இப்போது அவரைத் தேடி தேசிய விருதே வந்து விட்டது.


சிறந்த நடிகை- நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)


சிறந்த நடன காட்சிகள் - ஜானி - சதீஷ் (திருச்சிற்றம்பலம்)  


'மேகம் கருக்காதா பெண்ணே...பெண்ணே' என்ற பாடலுக்காக சிறந்த நடனத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்