ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இன்று கரையை கடக்கும்.. தமிழகத்தில் 6 நாள் மழைக்கு வாய்ப்பு!

Sep 09, 2024,12:10 PM IST

சென்னை:   வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இன்று கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 14ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய வங்ககடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு  தென்கிழக்கே 230 கிலோமீட்டர் தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது. 




இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையான பூரி மற்றும் திகா இடையே கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் இன்று முதல் 12 ஆம் தேதி வரை மீனவர்கள் அறிவிக்கப்பட்ட கடப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதேபோல் சென்னையில் அருகே உள்ள காமராஜர் துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ஆம் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாக வாய்ப்பு இருந்தால் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 14ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது தரைக்காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்