50 லட்சம் செலவில் ‘பங்களா’ .. மும்பை அழகியுடன் விமல் குத்தாட்டம்.. எங்கே தெரியுமா?

Mar 28, 2024,05:59 PM IST

சென்னை: 50 லட்சம் செலவில் பங்களா செட் அமைத்து மும்பை நடன அழகியுடன் விமல் அதிரடி குத்தாட்டம் போட்டுள்ளார்.

எதற்கு தெரியுமா? எஸ்.எழிலின் இயக்கத்தில் உருவாகி வரும்'தேசிங்கு ராஜா 2'வுக்காக தானாம்.


'துள்ளாத மனமும் துள்ளும்' படம்  மூலம் இயக்குநராக அறிமுகமான எழில். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் கண்டெடுத்த பல இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குநர் எழில். இவர் 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் 'தேசிங்கு ராஜா 2'வுக்காக்க இயக்குநர் எஸ்.எழிலுடன் இணைந்துள்ளார். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.  




இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ஜனாவும் இரண்டாவது கதாநாயகியாக ஹர்ஷிதாவும் நடிக்கின்றனர். ரவிமரியா, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், விஜய் டிவி புகழ், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி, சாம்ஸ், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.  இப்படத்தில், கவிஞர் சூப்பர் சுப்பு பாடல் வரிகளில், ஜித்தின் ராஜ், எம்.எம்.மானசி குரலில் உருவான "டோலி டாங்க் ஆனா டேஞ்சரு.. ரொம்ப டேஞ்சரு.." என்கிற பாடல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்தபாடலுக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஐம்பது லட்சம் செலவில் கலை இயக்குனர் சிவசங்கர் பிரமாண்ட பங்களா செட் ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளார். நடன இயக்குனர் தினேஷ் நடன வடிவமைப்பில் உருவாகி வரும் இந்த பாடலில் விமல் மற்றும்  பிரபல பாலிவுட் டான்சர் சினேகா குப்தா இருவரும் இணைந்து அதிரிபுதிரியான குத்தாட்டம் போட்டுள்ளனர்.


காட்சிப்படி, போலீஸ் அதிகாரியான விமல் பல பிரச்சனைகளால் டென்ஷனாக இருக்கிறார். அதனால் அந்த சூழலில் இருந்து அவர் சற்று ரிலாக்ஸ் ஆகும் விதமாக இப்படி ஒரு பாடல் படத்தில் இடம் பெற்றுள்ளது. இதுவரை விமல் நடித்த படங்களில் அவர் ஆடிய நடனங்களில் இருந்து இதுபோல் இப்படி அவர் ஆடியது இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடனத்தில் மிரட்டி இருக்கிறார் விமல். இதற்காக சில நுணுக்கமான நடன அசைவுகளையும் தினேஷ் மாஸ்டரிடமிருந்து கற்றுக்கொண்டு சினேகா குப்தாவுக்கு ஈடு கொடுக்கும் விதமாக அதிரடி நடனம் ஆடி அசத்தியுள்ளார்,விமல்.


படப்பிடிப்பில் இருந்த அனைவரும் விமலின் நடனத்தை பாராட்டினார்கள். படம் வெளியான பிறகு விமலின் நடனம் குறிப்பிடும் வகையில் பேசப்படும் என படக்குழுவினர் இப்போதே கூறுகின்றனர். தற்போது இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் வரை  தொடர்ந்து இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது. காமெடி மற்றும் கலாட்டா கலந்த படமாக இந்த  சம்மருக்கு இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்