லடாக்: லடாக்கில் ராணுவ டேங்கரில் 5 ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்க முயன்று பயிற்சியில் ஈடுபட்ட போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 5 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில் சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், லடாக்கில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லடாக் நியோமா- சுஷூல் பகுதியில் வெள்ளத்தின் போது ஆற்றைக் கடப்பதற்கான பயிற்சிகள் ராணுவ வீரர்களுக்கு நடத்தப்படுவது வழக்கம். அதே போல வழக்கமான பயிற்சி நடைபெற்று வந்தது.
இதற்காக டி 72 வகை ராணுவ பீரங்கியில் நேற்று மாலை 5 ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீர் அதிகரித்தது. அப்போது பீரங்கியுடன் ஐந்து பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக ராணுவ அதிகாரிகளின் உதவியோடு, ராணுவ வீரர்கள் மீட்பு படையினர் உதவியுடன் தேடலில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை 5 ராணுவ வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியின் ஏற்பட்ட துரதிஷ்டவசமான விபத்தில் நமது வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்த துயர சம்பவத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}