சக மாணவனை.. 108 முறை "காம்பசால்" குத்திய 4 ம் வகுப்பு மாணவர்கள்.. எங்கே.. ஏன்..?

Nov 27, 2023,07:27 PM IST

- மஞ்சுளா தேவி


இந்தூர்:  நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே சண்டையின் போது, சக மாணவனை, மூன்று மாணவர்கள் சேர்ந்து காம்பஸ்சால் 108 முறை குத்திய சம்பவம் இந்தூரில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. நவம்பர் 24ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையில் மாணவர் ஒருவரை அவருடன் படிக்கும் சக மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து காம்பஸ்சால்  108 முறை தாக்கியுள்ளனர். இதனால் அந்த மாணவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.


பாதிக்கப்பட்ட மாணவருடைய தந்தை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று காவல் உதவி ஆணையாளர் விவேக் சிங் சவுகான் விசாரணை மேற்கொண்டார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மூவரும் 10 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால் இவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்று சட்ட ரீதியான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்




இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல குழு தலைவர் பல்லவி போர்வால் கூறுகையில், 4ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை உடன்படிக்கும் சக மாணவர்கள் காம்பஸ்சால் தாக்கிய சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வளவு சிறிய வயதுடைய மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுடைய குடும்பத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் மாணவர்கள் வன்முறை காட்சிகள் அடங்கிய வீடியோ கேம் எதுவும் விளையாடுகிறார்களா என்பதை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார்.


9 வயது சிறுவர்களுக்குள் கொலை வெறி ஏன்?


இந்த சிறுவர்களுக்கு 9 வயதுதான் இருக்கும். இப்படி சிறு வயதுடைய குழந்தைகள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள்..? அவர்களுக்கு வீட்டில் என்ன பிரச்சனை ..?அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனரா.. வீட்டு வன்முறை அவர்களது மனதை வன்முறைக் களமாக்கியுள்ளது...அல்லது வீட்டிற்கு வெளியே எதுவும் பிரச்சனையா.. என்பதை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


அந்தக் காலம் போல் இக் காலம் கிடையாது. இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாக உள்ளது. குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றாலும் கையில் மொபைல் மட்டும் இருந்தாலே போதும் .எல்லா விஷயத்தையும் கற்றுக் கொள்வதற்கு அது போதும். ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுடைய குழந்தைகளிடம் தினமும் 10 நிமிடமாவது நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேச வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே குழந்தைகள்  அவர்களது பிரச்சனை என்னவென்று கூறுவார்கள். அதனை நாம்மால் சரி செய்ய முடியும்.


9 வயது சிறுவர்களுக்கு கொலை வெறியோடு தாக்கும் மன நிலை இருக்கிறது என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.. குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பள்ளிப் பிள்ளைகளுக்கு தொடர் கவுன்சிலிங் தரப்பட வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்